book

நம்பிக்கை நட்சத்திரமாய்

Nambikkai Natchathiramai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :124
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788183452403
Add to Cart

புதிய மனிதன் வாழ்வின் முழுமையான தத்துவமானவன், அதை எப்படி முழுமையாக வாழ்வது என்றும் தொட்டில் முதல் சுடுகாடு வரை இழுத்து கொண்டு போவது வாழ்க்கையல்ல என்றும் அறிந்தவன் அவன். ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமாக, ஒரு பாடலாக, நாட்டிய மாக, திருவிழாவாக வாழ்வை நாம் நடத்திச் செல்ல முடியும்.
இதுவரை இருந்த பழைய மனிதன் இப்பொழுது மரணப் படுக்கை யில் கிடக்கிறான். அவன் நிறைய வேதனைப்பட்டு விட்டான். அவனுக்கு நம் முடைய அனுதாபம் மொத்தமும் தேவைப்படு கிறது. அவன் அவலத்தில் வாழப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறான். துன்புறுவதிலும் சுயசித்திரவதைக்கும் அவன் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறான், அவனுக்கு சத்தியங்கள் வழங்கப்பட்டன. சாவுக்குப் பிறகு மகத்தான பரிசுகள் காத்தி ருப்பதாகக் கூறப்பட்டிருக் கிறது. எத்தனை வேதனை அவன் படு கிறானோ எவ்வளவு தூரம் தன்னையே துன்புறுத்திக் கொள்ளும் மசோசிஸ் ட் (Masochist) ஆகிறானோ, தன் சுய கௌரவத்தை எவ்வளவு அழித்து கொள் கிறானோ அவ் வளவு தூரம் பரிசுகள் அதிகரிக்குமாம்.
இது சிலரின் சுயநலங்களுக்கு சாதகமான கருதுகோளாக இருந்தது. துன்புறும் மனிதனை அடிமைப்படுத்துவது சுலபம். அறியாத நாளைக்காக தன் இன்றைய வாழ்வை தியாகம் செய்ய ஒப்புக் கொண்டவன் தன்னை அடிமையாக்கிக் கொள்ளும்படி அறிவித்து விட்டவன். எதிர் காலம் அவன் கட்டுப்பாடு ஆகிவிட்டது. காலாகாலமாக அவன் வெறும் நம்பிக்கைகளில் வாழ்ந்து விட்டான். கற்பனைகளிலும், கனவுகளிலும், பிரமைகளிலும் வாழ்ந்து விட்டானே தவிர யதார்த்தத்தை அவன் கண்ட தில்லை, யதார்த்த வாழ்வையன்றி வேறு வாழ்க்கையில்லை