book

துப்பறியும் சாம்பு

Thuppariyum Saambu

₹395+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :600
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681841
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு
Out of Stock
Add to Alert List

'துப்பறியும் சாம்பு'வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

விளாம்பழம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நனைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை! கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கு மல்லவா? அந்த மாதரி஛ சாம்புவின் காதுகள் துருத்திக்கொண்டு இருக்கும். கண்கள், ஒரு மாதிரியாக அரைத் தூக்கத்தைத் தேக்கிக்கொண்டிருக்கும்.

இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை, ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதுதான் சாம்புவின் தோற்றம்.துப்பறியப் போகிறேன் எனக் கிளம்பி, சாம்பு அடிக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையின் உச்சம். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களை,பாகம் பாகமாக மகிழ்வித்து வந்திருக்கிறார் அமரர் தேவனின் துப்பறியும் சாம்பு.சாம்பு என்னும் இந்தக் குருவி உட்கார்ந்தால், பனம்பழம் மட்டுமல்ல, பனைமரமே விழுந்துவிடும்.