book

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே!

Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681438
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, போர்
Out of Stock
Add to Alert List

'இந்தியாவைச் சுற்றி இருக்கும் எந்த தேசத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு காலத்தில் எந்த நாட்டிடமாவது அடிமைப்பட்டுத்தான் இருக்கும். சீனாவின் ஒரு பகுதியைக் கூட கொஞ்சநாள் ஜப்பான் களவாடி வைத்திருந்தது.

ஆனால் இந்த ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியம், அடிமை வாழ்க்கை போன்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆதி முதல் நேற்றுவரை உலகின் ஒரே சுதந்தர ஹிந்து தேசமாக இருந்தது நேபாளம்.

ஆனால் அடுத்தவர் செய்தால்தான் பிரச்னையா என்ன? நேபாளத்துக்கு அதன் மன்னர்கள்தான் பிரச்னை.

முடியாட்சி தேசமாகவே இந்த 21ம் நூற்றாண்டுவரை எப்படியோ காலம் தள்ளிக்கொண்டு வந்துவிட்டநேபாளத்து மக்கள், இன்று புரட்சியில் ஈடுபட்டிருப்பதன் காரணம் அதுதான்.

மன்னராட்சி ஒழியவேண்டும்; மக்களாட்சி மலரவேண்டும்.

நேபாளத்து மாவோயிஸ்டுகள் குறித்து தினசரி செய்தித்தாள்களில் ஏதோ ஒரு மூலையில் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இத்தனை பேர் வெட்டிக்கொலை, இத்தனை பேர் சுட்டுக்கொலை என்று இடம் நிரப்பும் பொருளாக இருந்துவருகிற விஷயம்.

ஆனால் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க அம்மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எப்படியெல்லாம் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பது கண்ணில் ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் விஷயம்.

பெயருக்கு ஒரு பாராளுமன்றம், கையெழுத்துப்போட ஒரு பிரதமர் என்று அவ்வப்போது மன்னர் அனுமதி கொடுப்பார். நினைத்துக்கொண்டால் உடனே கலைத்தும் விடுவார்.

இந்த அவலத்தைச் சகிக்கமுடியாமல் பொங்கியெழுந்த நேபாள மக்களின் தீரம் மிக்க போராட்டம்தான் நேபாள சரித்திரத்தின் மிக முக்கியமான பாகம்.

விறுவிறுப்பும் சுவாரசியமும் மிக்க இந்த வரலாறை எழுதியிருக்கும் என். சொக்கன், முன்னதாக அயோத்தி பிரச்னையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் 'அயோத்தி : நேற்று வரை' என்கிற நூலை எழுதியவர். அம்பானி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, லஷ்மி மிட்டல் உள்ளிட்ட பல பிசினஸ் மகாராஜாக்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். ஆனந்த விகடனில் இவர் எழுதும் 'வல்லினம் மெல்லினம் இடையினம்' தொடர், இந்திய மென்பொருள் துறையின் ஆன்மாவைப் படம்பிடித்துக் காட்டி, லட்சக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. '