book

அல் காயிதா

Al-Qaeda : Bayangarathin Mugavari

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183681018
குறிச்சொற்கள் :இயக்கம், சரித்திரம், பிரச்சினை, போர்
Out of Stock
Add to Alert List

'ஆதாரபூர்வமான தகவல்கள். மிரட்டலான மொழிநடை. நெஞ்சு நடுங்க வைக்கும் நிஜம்.

ஒசாமா பின்லேடன் என்கிற தனி மனிதர், அல் காயிதா என்னும் இயக்கமாக உருவானதன் பின்னணி என்ன? யார் அல்லது எது காரணம்? தமது தீவிரவாத நடவடிக்கைகளுக்குக் கவசமாக, கேடயமாக அவர் இஸ்லாத்தைப் பயன்படுத்துவதில் உள்ள அரசியல் என்ன? அல் காயிதாவில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? யார் யார் சூத்திரதாரிகள்? எங்கெல்லாம் அவர்கள் பரவியிருக்கிறார்கள்? அல் காயிதாவின் நெட் ஒர்க் பலம் எப்படிப்பட்டது? எங்கிருந்து பணம் வருகிறது? ஒரு தாக்குதலை எப்படி திட்டமிடுகிறார்கள்? ஆள்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்? என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படுகின்றன?

பிராந்திய உணர்வுகள் ஏதுமில்லாமல் உலகு தழுவிய பயங்கரவாதம் வளர்க்கும் ஒரே அமைப்பு அல் காயிதா. அதன் தோற்றம் முதல் ஆப்கன் யுத்தத்துக்குப் பிறகான சரிவு வரை ஒன்று விடாமல் அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

ஒரு நாவல் போல் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், அல் காயிதா என்கிற தீவிரவாத இயக்கத்தின் அடி முதல் நுனி வரை அலசுகிறது. அல் காயிதாவின் அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மிக விரிவான அலசல்களை உள்ளடக்கிய 9/11: சூழ்ச்சி மீட்சி வீழ்ச்சி' நூலின் ஆசிரியர் வழங்கும் மற்றுமொரு விறுவிறுப்பான படைப்பு.