book

சிறுவர்களுக்கான அன்னை ஸ்ரீசாரதா தேவி

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ஸ்மரணானந்தர்
பதிப்பகம் :ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
Publisher :Sri Ramakrishna Math
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

உங்கள் கைகளில் தவழ்கின்ற இந்த நூல் சமய வரலாற்றில் தனித்துவம் வாய்ந்தது. வேத காலத்திலிருந்தே சமய வரலாற்றில் பெண்களுக்குத் தனியிடம் இருந்துவந்துள்ளது. வாழையடி வாழையாக, எண்ணற்ற பக்தைகளும் கர்ம வீராங்கனைகளும் யோகினிகளும் ஞானியரும் தோன்றி, உலகின் சமய வரலாற்றை வளம் பெறச் செய்து வந்துள்ளனர். ஆனால் இந்த நூல் பக்தையாகவும், கர்ம வீராங்கனையாகவும், யோகினியாகவும், ஞானியாகவும் வாழ்ந்த ஒரு பெண்மணியின் வரலாறு. அது மட்டுமல்ல அவருக்குத் திருமணம் நடந்தது, கணவருக்கு ஏற்ற மனைவியாக அவர் வாழ்ந்தார், ஆனால் கன்னியாக இருந்தார். கன்னியாக இருந்தார், ஆனால் ஆயிரக்கணக்கானோர் 'அம்மா அம்மா' என்று அழைக்கின்ற தாயாக வாழ்ந்தார். அசாதாரணமானதொரு குடும்பச் சூழ்நிலையில் வாழ்ந்தார், ஆனால் துறவி வேந்தர்களை உருவாக்குகின்ற துறவின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். இவ்வாறு முரணான அனைத்தையும் கோத்து நின்றது அவரது தாய்மைப் பேருணர்வு. அவரது பெருவாழ்வின் மூலம் பெண்மை புனிதம் பெற்றது, மனைவி என்ற நிலை மதிப்புப் பெற்றது, தாய்மை தனியிடம் பெற்றது. ஆம். அன்னை ஸ்ரீசாரதா தேவியின் வாழ்வு ஓர் அற்புதம்.
அன்னையின் விரிவான வரலாறு, தமிழில் 1982-ஆம் ஆண்டு முதன் முதலாக எமது மடத்திலிருந்து வெளிவந்தது. இது சுவாமி தபஸ்யானந்தர் எழுதி, 1940-ஆம் ஆண்டு வெளியான ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். சுவாமி தபஸ்யானந்தரின் நூலைத் தொடர்ந்து, வங்க மொழியிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. இவை அன்னையின் வாழ்வைப்பற்றிய பல புதிய தகவல்களைத் தருகின்றனஈடிணையற்ற அவரது பெருவாழ்வின் புதிய பரிமாணங்களைக் காட்டுகின்றன.