book

கனவுகளும் பலன்களும்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. ‌தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2012
Out of Stock
Add to Alert List

மனதின் வெளிப்பாடே கனவுகள். எந்த கனவுகளும் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல. அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வு வெளிப்பாடுகள். அவற்றுக்கும் பலன்கள் உண்டு. நல்ல கனவுகளைக் கண்டால் என்றுமே உறக்கம் வராது. அதுபோல தீய கனவுகளைக் கண்டால் கடவுளை வணங்கிவிட்டு உறங்குவது நல்லது.
சாஸ்திரம் கூறுகிறது.இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2 ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் (அதிகாலை ) கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.
சுப சொப்பனங்கள் பசு, எருது, யானை தேவாலயங்கள,அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்? ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும்.