book

பாரதியார் கவிதைகள் H/B

Bharathiyar kavithaigal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :பாரதியார், கவிதைகள்
Out of Stock
Add to Alert List

பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்;  குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக் கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்;  மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம்.  அவனது கவிதைத் தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. 

அது-

சூரியப் பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழை பிரித்து நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியிலே நெய்தெடுக்கபட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போர்த்துபவையுமான காவியப் பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே அவனது கவிதைப் புத்தகம்.