book

வள்ளுவரின் உலகப்பார்வை

Valuvarin Ulaga Parvai

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. வீரமணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :196
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415427
Out of Stock
Add to Alert List

தமிழ் , தமிழர்களின் தொன்மையையும் , தமிழ் நாகரிகத்தின் விழுமியங்களையும் நேரிய முறையில் தெளிவாக அறிய
விரும்புவோர்க்கு ம்மார்க்சிய பயில்முறையே வழிகாட்டி இதனை எவராலும் மறுக்கவியலாது. திருக்குறள் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் காணப்படும்  சில குறள்களை, சொல்லாட்சிகளை ஆதாரமாகக்கொண்டு திருவள்ளுவர் , ஜைனர், பெளத்தர், சைவர், வைணவர், கிறித்தவர் என்று அவரவர் சமயச்சார்புக்கேற்ப உரிமை கொண்டாடி நிலைநாட்ட முற்படுவார்கள். அவர்களுடைய வாதங்களின் வன்மையையும் , மென்மையையும், ஆழ்ந்து ஆராய்ந்து, அவற்றை மறுத்து, மானுடத்தை மிகச் சிறப்பாக மதித்துப் போற்றிய சமயச் சார்பிலா மனிதநேயர் திருவள்ளுவர் என்பதனையையும் நிலைநாட்டுகிறார். திருவள்ளுவர் காலத்தைப் பற்றித் தெளிவாக வரையறை இதுவரை கிட்டவில்லை. பெரும்பாலான அறிஞர்கள், அவர் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதுவர். திருவள்ளுவர் நாத்திகர் அல்லர். இறை நம்பிக்கை உடையவர்  எனலாம். எனவே அவர் காலத்தில் வழக்கிலிருந்த சில கதைகள் சொல்லாட்சிகள், மரபுகள் சிலவற்றைக் கையாள்வதனால், அவர் மதத்தைச் சார்ந்தவர் என்பதனைப புலவர் வீரமணி சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.

                                                                                                                                               - ஆர். பார்த்தசாரதி.