book

மரபீனி மாற்ற உணவும் பட்டினியும்

Marabeeni Matra Unavaum Patiniyum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சே. கோச்சடை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2007
ISBN :9798123411889
Add to Cart


    மரபணுரீதியான மாற்றப்பட்ட உணவு உற்பத்தி முறைகளையும் உயிர்த் தொழில் நுட்பத்தையும் அமெரிக்கா எப்படியெல்லாம் தனது ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்பதை முழுமையாக அம்பலப்படுத்துகிறது இந்நூல். 2000-ம் ஆண்டில் இந்திய உணவுக் கிடங்குகளில் 4 கோடி டன்னுக்கும் அதிகமான தானியங்கள் தேங்கிக் கெட்டுப்போகும் நிலைமையில்கூட. அவற்றை அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய முன்னனி அரசு, வறுமையில் வாடிக்கொண்டிருந்தம மக்களுக்கு வழங்க மறுத்து விட்டது, மாறாக அதை  மிகக்குறைந்த விலையில் ஏற்றுமதி செய்தது .மூன்றாம் உலக நாடுகள்  பலவற்றில் இத்தகைய அரசுகள் இருப்பதால், அமெரிக்கா தனது உணவு ஆதிக்கக் கொள்கையை தன் விருப்பப்படியெல்லாம் சுழற்றுகிறது.

இதன் பொருட்டுத் தனது பொருளாதார, அரசியல் ஆதாய நோக்குடன் இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் மரபீனி மாற்ற உற்பத்தி முறையை எப்படியெல்லாம் அமெரிக்கா பயன்படுத்துகிறது. அதன் விளைவுகள் அந்நாடுகளை எப்படியெல்லாம் பாதித்தது என்பதையும் பாதிக்கிறது என்பதையும் ஆழ்ந்த ஆய்வுடனும் மிகுந்த விவரங்களுடனும் பேராசிரியர் தேவிந்தர் சர்மா ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

                                                                                                                                                           - பதிப்பகத்தார்.