book

பாரதியின் பார்வையில்...

Bharathiyin parvaiyil…

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :175
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788189936785
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

சுதந்திரத்தையே மூச்சாகக் கொண்டு, கடைசி வரை அந்த மூச்சுக்காற்றை வலுவுள்ளதாக்கி வாழ்ந்தவர் மகாகவி பாரதி. இலக்கியத்தில் சிகரமாகத் திகழ்ந்தவர்.
எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டிருந்த அவருடைய நட்பு வட்டமும் மிகச் சிறந்ததாக அமைந்திருந்தது. அவர்களுடனான பாரதியின் நட்பு, நாட்டுக்கு நன்மை செய்தது; சோர்ந்து கிடந்த மக்களுக்கு மிகப் பெரும் உத்வேகத்தை அளித்தது. இப்படி, அறிஞர்கள், கவிஞர்கள், இசைக் குயில்கள், ஆன்மிக அருளாளர்கள் போன்றோருடன் பாரதி கொண்டிருந்த நெருக்கத்தால், பாரதியின் மற்றொரு பரிமாணம் எப்படி இருந்தது என்பதை, நாம் இந்த நூலின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

பாரதியின் கண்ணோட்டத்தில் உத்தமர்களைப் பார்ப்பது நம் கண்ணுக்கு விருந்து, எண்ணத்துக்கு உரம். பாரதி இந்தக் கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தைப் பார்த்து வெளிப்படுத்தியுள்ளார்... என்பதை நூலாசிரியர் எடுத்துரைத்துள்ள பாங்கு, பாரதியின் மற்றொரு பரிமாணத்தை நாம் எளிதாக உணரும்படி செய்கிறது.

பாரதிக்கு முன்னர் இருந்த உலகக் கவிஞர்கள், புரட்சியாளர்கள் எப்படி பாரதி கொண்டிருந்த கொள்கைகளோடும் கவிதைக் கருத்துகளோடும் இணைந்துப் போயிருக்கிறார்கள் என்கின்ற ஒப்புமைப் பார்வை, இந்த நூலில் பார்க்கப்பட்டுள்ளது. தேசத்தலைவர்களோடு கொண்ட நெருக்கம் காரணமாக பாரதியின் தேசியப் பார்வை வலுவாக இருந்ததையும், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் கொண்டுவரப்பட வேண்டும் என்று செயல்பட்டதையும் நாம் பாரதியின் இன்னொரு பரிமாணத்தில் பார்க்கிறோம்.

பாட்டுக்கொரு புலவனாக நாம் பார்த்த பாரதி, இங்கு, சோர்வுற்றபோது நிதானமாக இருந்தான்; அட்டூழியம் கண்டு நெருப்பென எழுந்தான்; சோகத்தில் கரைந்தான்; நிலைகெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் மறுகினான். அமைதியையும் சாந்தியையும் கண்டான். அவை மட்டுமல்ல, அவற்றை இதோ பார்த்துக்கொள் என்று நம்மையும் காண வைத்தான்.

ஒரு நண்பனாக, மந்திரியாக, நல்லாசிரியனுமாக இருந்த பாரதி, பண்பிலே தெய்வமாக, நம் எல்லோருக்குமே வழிகாட்டியாகவும் இருக்கிறான். இவன் பாரதிதானா, அல்லது கலைவாணியேவா என்ற மலைப்பு, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு ஏற்படும்.