book

நினைவுத்தடங்கள்

Ninaivuthidangal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உஷாதீபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411835
Add to Cart

அமைதியாக ஒரு பக்கம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்கும் இவரது நிதானம்...


எவ்விதப் படபடப்பும், ஆர்ப்பாட்டமும் இல்லாது ஆழ்ந்து, அடங்கிய அமைதியான குரலில் கதை சொல்லும் முறை...

நடுத்தர வர்க்கத்து மனோபாவத்தை விஸ்தாரமாக எடுத்துப் பேசுவது இவர் கதைகளின் அடிநாதமும்  - சாரமுமாக அமைகிறது.  பொது வாழ்வு குறித்த சிந்தனைகளை முன்வைக்கும் கதைகளும் உண்டு.

கொச்சத்தனம் இல்லாத யதார்த்தத்தைக் கையாள்வதில் படைப்பாளர் உஷாதீபன் வல்லவராகத் திகழ்கிறார். மக்களின் மனநிலைகளை, தியாக உணர்வுகளை, பொதுநலச் சிந்தனைகளைப் புதுமையாகப் படைத்து தருகிறார்.  கதைகளில் வரைந்துள்ள பல வரிகள் கண்களைக் குளமாக்கி மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்தி அன்பின் ஆழத்தைக் கண்டறியத் தூண்டிவிடுகிறது. இதுவரை ஏழு நூல்களைப் படைத்துள்ள உஷாதீபன் எட்டாவது நூலாக 'நினைவுத் தடங்கள் என்னும் இந்நூலில் நிஜங்களைப் பதிவு செய்கிறார்.