book

எளிய தமிழ் இலக்கணம்

Eliya Tamil Ilakkanam ( Eliya Thamizh Ilakkanam)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. தட்சிணாமூர்த்தி
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :248
பதிப்பு :2
Published on :2003
Add to Cart

நல்ல தமிழ் எழுதவேண்டும் என்ற எண்ணம் எங்கும் மலரக் காண்கிறோம். செய்தித்தாள்களிலும், மாணவர் தம் பயிற்சி ஏடுகளிலும் தோன்றும் பிழைகளை நீக்கிக் கொள்ள எளிய தமிழில் இலக்கணம் வெளி வரவேண்டும் என்று எல்லோரும் உரைக்கின்றனர். கல்லூரிப் பாடத் திட்டத்தை ஒட்டிச் சில பொதுப் பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பினும் வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்களை வகைப்படுத்தி நிரல் செய்திருத்தல், சொற்பிழை நீக்குதற்காக எழுத்து மாறுபாடுகளை அகர வரிசையிற் காட்டியிருத்தல், வடசொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்களை அகர வரிசையில் கொடுத்திருத்தல், பொருள் இலக்கணத்தில் கருப்பொருளை வரிசைப்படுத்திக் கொடுத்திருத்தல் போன்ற புதுமைகள் பல இந்நூலின் தனிச் சிறப்பாகும். தேவையான இடங்களில் நன்னூற் சூத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொன்மை சான்ற நன் மரபுகளைப் பேணியும், சில புதுமைகளைச் சேர்த்தும் இந்நூலை ஆக்கியுள்ளோம். இலக்கணம் அறிய இந்நூல் நன்கு பயன்படும் என்பது மறுமலர்ச்சி எழுத்தாளர்கட்கும், கவிஞர்கட்கும், மாணவர்க்கும் மிகுதியும் பயன்படத்தக்க பகுதிகள் இந்நூலில் மிகுதியும் உள்ளன. இந்நூலை அச்சிட்டு அழகுற வெளியிட உதவிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.