book

ஒதுக்கப்பட்டவர்கள்

Othuka Patavargal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எம். சாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :196
பதிப்பு :1
Published on :2007
ISBN :9798123411827
Add to Cart

இந்தக் கதைகளில் ஆகச்சிறந்த காரியம் சாலன் பயன்படுத்தியிருக்கும் உரையாடல்.  தலித் சூழல் பற்றிய சித்தரிப்புகளும் மிக அருமையாக உள்ளன.  எந்த அலட்டலும் இல்லாமல், கதையிலிருந்து முற்றிலும் விலகி நின்று, ஆசிரியர் கதைகளை நடத்திச் செல்லும் பாங்கு கதையின் எதார்த்த தன்மைக்கு வலிமையும் அழகும் கூட்டுகிறது.

தமிழை போல மலையாளத்திலும் நன்கு அறிமுகமான எழுத்தாளர் சாலன்.  மலையாளத்திலிருந்தும் ஏராளமான நல்ல சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.  சாலனின் கதைகளில் சில மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

- பொன்னீலன்

படைப்பாளர் ஏ.எம். சாலன் அவர்கள் யதார்த்த உலகினூடே ஊடுருவிச்சென்று இந்நூலில் 16 சிறுகதைகளைப் படைத்துத் தந்துள்ளார்.  சட்டசபை விவாத்த்தின்போது சிலர் தடித்த சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.  அந்தச் சொற்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிடுவார்கள்.  சட்டசபையில் கூடத் தணிக்கை செய்யும் அளவில் உள்ளது. இந்நூலில் கருத்துள்ள கதைகள் உள்ளன. சாலன் அவர்கள் யாதார்த்தம் என்ற புதிருக்குள் சில வரிகளை, சில வார்த்தைகளை, சில நிகழ்வுகளை இழையோடவிட்டிருப்பது யதார்த்தமா, எதிரானதா என்பது பற்றி வாசகர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

-பதிப்பகத்தார்