book

விஜயதரங்கிணி

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முகிலன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

சமுக நாவல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அமரர் கல்கி அவர்கள் ‘பார்த்திபன் கனவு’ சரித்திர நாவலை எழுதத் தொடங்கிய போது, வாசகர்கள் மத்தியில் அந்நாவல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘பொன்னியின் செல்வன்,’ ‘சிவகாமியின் சபதம்’ ஆகிய இரண்டு சரித்திர நாவல்களும் வாசகர்கள் மனத்தில் அழியா இடம் பெற்றன.

அமரர் கல்கி அவர்களைத் தொடர்ந்து அமரர் சாண்டில்யன் அவர்கள் எழுதிய ‘யவன ராணி’ வாசகர்கள் மனத்தில் வரலாற்று நாவல்களிலும் மிகுந்த சுவையும், விறுவிறுப்பும் உண்டு என்பதை உணர வைத்தது. அமரர் அகிலன் அவர்கள் எழுதிய ‘வேங்கையின் மைந்தன்’ வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

‘பொன்னியின் செல்வனி’ன் தொடர்ச்சியாகக் கலைமாமணி திரு. விக்கிரமன் அவர்கள் ‘நந்திபுரத்து நாயகி’யை எழுதிச் சரித்திர நாவல்களின் மேன்மையை வாசகர்கள் உணரும்படி செய்தார்.

திரு. விக்கிரமனைத் தொடர்ந்து திரு. கோவி. மணிசேகரன், திரு. கௌதம நீலாம்பரன் போன்ற சரித்திர நாவலாசிரியர்கள் சரித்திர நாவல்களின் மூலம் முந்தைய நூற்றாண்டுகளின் நிகழ்வுகளை வாசகர்கள் மனத்தில் பதிய வைத்தனர்.

அமரர் கல்கி, அமர சாண்டில்யன், அமரர் அகிலன், திரு. விக்கிரமன் போன்றோர் எழுதிய சரித்திர நாவல்களைப் படித்த நானும் மிகுந்த ஆர்வத்துடன் சரித்திர நாவல்கள் எழுதத் தொடங்கினேன். என்னுடைய முயற்சியில் வெற்றியும் பெற்றேன். நான் எழுதிய ‘வைகையின் மைந்தன்’ கலைமகள் மாத இதழில் பரிசு பெற்றுத் தொடராக வெளிவந்தது. நான் எழுதிய ‘சாளுக்கியன் சபதம்’ அமுதசுரபியும், சுஜாதா பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றுப் புத்தகமாக வெளிவந்தது.