மூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai

Moondraam pariman sinthanai - மூன்றாம் பரிமாணச் சிந்தனை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: டி.ஐ. ரவீந்திரன் (T.I.Raveendran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936600
Pages : 128
பதிப்பு : 5
Published Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனை, முயற்சி, திட்டம், உழைப்பு, தகவல்கள்
தேவ மருந்து நீங்களும் நுகர்வோரே
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனிதனின் மனம் எப்போதும் சிந்தனை வயப்பட்டே இருக்கும். சிந்தனை ஏதுமின்றி வெற்று மனத்தோடு எப்போதும் இருப்பதில்லை. இந்தச் சிந்தனையின் விளைவாகவே தீர்வுகள் கிடைக்கின்றன. அதுவே தவம் மற்றும் தவத்தின் இறுதியில் கிடைக்கும் வரம் போன்றது.

  மனிதனின் சிந்தனையை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். மனம் சிந்திக்கிறது என்றாலும், அது அறிவு மற்றும் உணர்வு ஆகிய இரு வகைகளில் அமைகிறது. அறிவுபூர்வமான சிந்தனை, உணர்வுபூர்வமான சிந்தனை என்ற இந்த இரு வகைகளில் பெரும்பாலும் நம்நாட்டின் பழக்க வழக்கங்களை வைத்துப் பார்க்கும்போது, உணர்வுபூர்வமாக சிந்திப்பவர்களே அநேகர் எனலாம்.

  எந்த ஒரு விஷயத்தையும் பற்றிய யோசனைகளை செயலாக்கும்போது, அதை உணர்வின் அடிப்படையில் அமைவதைப் பெரும்பாலும் காணலாம். மேலைநாடுகளின் அடிப்படை அமைப்பைப் பொறுத்து நாம் கண்டால் அறிவுபூர்வமான அதேசமயம் சில நேரங்களில் உணர்வும் கலந்த சிந்தனையைப் பெரும்பாலோர் வெளிப்படுத்துவர்.

  இந்த இரண்டையும் மீறி இன்னொரு வகையிலும் நம் சிந்தனையும் செயல்பாடுகளும் அமையும். அதேபோல் நல்லது & கெட்டது; வெற்றி & தோல்வி போன்ற இரட்டைகளைத் தாண்டி இவற்றில் அமையாத இன்னொரு வழியிலும் தீர்வுகள் அமையும்...

  இவற்றைப் புரிந்துகொள்வது சற்றே கடினம் என்றாலும், அந்த மூன்றாவது சிந்தனையின் வெளிப்பாடுகள் சில பிரமிக்கத்தக்க வகையில் அமைந்து உணர்வுக்கும் அறிவுக்கும் சவால் விடுவதுண்டு. அப்படிப்பட்ட மூன்றாம் பரிமாணச் சிந்தனையின் திறனையும் விளைவுகளையும் இந்த நூலில் காட்டப்பட்டுள்ளது.

  இக்கட்டில் சிக்கித் தவிக்கும்போது, மரபாக நம் வழிவழிவந்த ரீதியில் சிந்திக்காது, அறிவும் உணர்வும் கலந்த மூன்றாம் பார்வையில் சிந்திப்பதால் ஏற்படும் நன்மைகள், பலன்களை சில உதாரணங்கள் மூலம் இந்நூலில் காணலாம். தீர்வுகளை நோக்கியே பயணிக்கும் நம் சிந்தனைகளுக்கு ஒரு பாதையை வகுத்துக்கொள்ளும் கலையை இந்நூல் காட்டுகிறது.

  எதையும் நாம் அணுகும் முறையை வைத்து நம்மை எடைபோட்டுக் கொள்ளும் சுய பரிசோதனைக்கலை இந்த நூலின் உதாரணங்களைப் படிக்கும்போது நமக்குள் வளர்ச்சிபெறும். காரணம், எந்த ஒரு சிக்கலையும் நாம் ஆகிவந்த பழைய முறையில் அணுகுவதற்கும், மூன்றாம் பரிமாணச் சிந்தனையின் வழியில் அணுகுவதற்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவதன் மூலம், நமக்கான சிந்தனை உத்தி முழுதாகக் கிடைக்கிறது.

  தன்னம்பிக்கை துளிர்த்து, பயத்தை அறுத்து, சுயத்தை வளர்க்கும் வித்தையை நமக்குள் மேம்படுத்துகிற‌து இந்த‌ நூல்.
 • This book Moondraam pariman sinthanai is written by T.I.Raveendran and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மூன்றாம் பரிமாணச் சிந்தனை, டி.ஐ. ரவீந்திரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Moondraam pariman sinthanai, மூன்றாம் பரிமாணச் சிந்தனை, டி.ஐ. ரவீந்திரன், T.I.Raveendran, Suya Munnetram, சுய முன்னேற்றம் , T.I.Raveendran Suya Munnetram,டி.ஐ. ரவீந்திரன் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy T.I.Raveendran books, buy Vikatan Prasuram books online, buy Moondraam pariman sinthanai tamil book.

ஆசிரியரின் (டி.ஐ. ரவீந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

ஐக்கிய நாடுகள் சபை - Aikkiya Naadugal Sabai

முஷாரஃப் எழுச்சியும் வீழ்ச்சியும் - Musharaf

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

வாழும் வழி

அறிய வேண்டிய ஆளுமைகள் - Ariya Vendiya Aalumaigal

செல்வச் செழிப்பு - எப்படி வரவழைப்பது? - Selva chezhippu - eppadi varavazaippathu?

வழிகாட்டும் மொழிகள் - Vazhikaattum mozhigal

கவியரசர் கண்ணதாசனின் துன்பங்களிலிருந்து விடுதலை (DVD) - Kaviyarasar Kannadasanin Thunbangalilirunthu Viduthalai (DVD)

கவலைகளை மறக்க நாம் அன்றாடம் செய்யவேண்டியவை

தன்னை அறிதல் ஆனந்தம் - Thannai Aridhal Aanandham

Words of INSPIRATION

நீங்களும் ஒரு சாம்பியனே - Neengalum oru champione

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீ லலிதா - Shri Lalitha

அழகான வீடு - Azhagana veedu

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea

உருள் பெருந்தேர் - Urul Perunther

இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல் - India Kaiyedu UPSC TNPSC Muthanmai Thervu Thayaripukana Karuvi Nool

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

ஆடத் தெரியாத கடவுள் - Aada Theriyatha Kadavul

அதிதி - Athithi

என் அண்ணா - En Anna

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk