book

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும்

Anburajavum katru kuthirayum

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936563
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக,
Out of Stock
Add to Alert List

திறமை _ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் ஒளிந்திருக்கிறது. சிலரிடம் உடல் உழைப்பாகவும், சிலரிடம் செயல்படும் வேகமாகவும் பொதிந்துள்ளது.
கதை சொல்வதற்கும்கூட ஒரு திறமையும் கற்பனை வளமும் வேண்டும். கதை கேட்பவருக்கு சலிப்புத் தட்டாமலும் சுவாரஸ்யம் சிறிதும் குறைந்து போகாமலும் வர்ணனைகளோடு கதை சொல்வதும்கூட ஒரு கலைதான். கதைகள் சொல்லப்படுவதும், அதை ஒரு குழுவாக அமர்ந்து கேட்பதும் இன்று நேற்றல்ல, நம் முன்னோர் காலம் முதல் இன்றுவரை வழிவழியாக உள்ளது.

குழந்தைகளுக்குக் கதை சொல்வது சுவாரஸ்யமானது; அதே நேரம் கொஞ்சம் சிரமமான காரியமும்கூட! கதை சொல்லும் விதமும் எளிமையாக இருக்கவேண்டும்; வர்ணனையும் குறையக்கூடாது; கதையில் கருத்தும் இருக்கவேண்டும். இத்தனை விஷயங்களையும் நிறைவுசெய்ய, கற்பனை சக்தியும் வேண்டும். நாம், நம் தாத்தாவையும் பாட்டியையும் கதை சொல்லச் சொல்லி தொல்லை செய்த காலமும் உண்டல்லவா?

இப்படி கதை சொல்லச் சொல்லி, கேட்டு மகிழ்ந்த காலம் போய், புத்தகங்களில் படக் கதைகளாகவும் சிறுகதைகளாகவும் படித்து மகிழும் போக்கு வளர்ந்தது. அதனால் கதைப் புத்தகங்களை சிறுவர்கள் விரும்ப ஆரம்பித்தனர். அப்படி சிறுவர்கள் விரும்பும் கதைப் புத்தகங்களுள் சிறப்பான ஒன்றாகத் திகழ்கிறது & அன்புராஜாவும் காற்றுக்குதிரையும்.

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த, மந்திர தந்திரங்களும் மாயாஜாலங்களும் சித்துவேலைகளும் நிறைந்த சுவாரஸ்யமான பொழுதுபோக்குக் கதை & இந்த அன்புராஜாவும் காற்றுக் குதிரையும். அதேசமயம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற சொல்லை உணர்த்தும் விதமாக அமைந்தது இந்தக் கதை.

சிறுவர் முதல் பெரியவர்வரை அனைத்துத் தரப்பிலும் இந்தக் கதை விரும்பிப் படிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்; கதை எப்படிப் போகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதையில் சுவாரஸ்யம் கூட்டி, கதாபாத்திரங்களின் பங்கு கதையோட்டத்தில் முழுவதுமாக வரும் வகையில் திகழ்கிறது. சிறுவர் கதைக் கொத்தில் இந்தக் கதை நூலும் ஒன்று.