book

தமிழ் விடு தூது

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ.ராதாகிருஷ்ணன்
பதிப்பகம் :பாரி நிலையம்
Publisher :paari nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

இலக்கியத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை தமிழின் சிறப்பு எடுத்துக் கூறப்படுகிறது. இலக்கியத்தில் இடம்பெறும்,
“அரியாசன முனக்கே யானா லுனக்குச் சரியாரு முண்டோ தமிழே(தமிழ்விடு தூது -62) இருந்தமிழே யுன்னா லிருந்தே னிமையோர் விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்”.(தமிழ்விடு தூது -151),
என்னும் கண்ணிகள் நூலாசிரியரின் தமிழ்ப்பற்றை அறிந்து கொள்ளச் சான்றாய் அமைவன. தமிழ் மொழியின் சிறப்பு களையும், தெளிவையும், இனிமையினையும், செறிவையும், திண்மையினையும் ஆசிரியர் நுட்பமான கண்ணோட்டத் துடன் கூறியிருக்கும் பாங்கு நூலாசிரியரின் தமிழ்ப்புலமைக்குத் தக்க சான்றாயமைகிறது. தமிழின் சிறப்புகளையும் பெருமை களையும் எடுத்துக்கூறும் இவ்விலக்கியத்தைக் கற்றுத் தமிழின் சிறப்புகளை உணர வேண்டியது நம் கடமை.
என் வாழ்வின் உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைப் பேராசிரியர்கள் முனைவர் மு. பொன்னுசாமி, முனைவர் ந. தெய்வசுந்தரம், விரிவுரையாளர் முனைவர் அ. பாலு ஆகியோருக்கு என் நன்றி. நான் பணியாற்றும் நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் உயர்திரு ஹென்றி மாரிஸ், முதல்வர் மற்றும் நடப்புக் கல்வி அலுவலர், உடன் பணியாற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி. நூலைச் சிறந்த முறையில் வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு என் நன்றி. இந்நூலைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்றுப் பயன் கொள்ள வேண்டும் என்பது என் அவா.