book

உலகம் இப்படித்தான்

Ulagam ippadithaan

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :224
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788189936525
குறிச்சொற்கள் :விஷயங்கள், தகவல்கள், முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

நிறைய சுவாரஸ்யங்கள் கொண்டது மனித வாழ்க்கை. பல்வேறு உணர்ச்சிகளோடு பயணவெளியில் கடந்து போகிறோம். நாமே நமக்கு மாபெரும் புரியாத புதிர்.
அந்தப் புதிர் விளங்கிக் கொள்ளப்படும் வரை நமது வாழ்க்கையின் சுவை குறையாமலேயே இருக்கும். ஆசைகளும் அவஸ்தைகளும், இன்னும் இன்னும் இருக்கின்றன. இதுபோலவே நம்முடன் இருக்கிற ஆகச் சிறந்த உணர்ச்சிகளெல்லாம் உலகம் இப்படித்தான் என்கிற இந்த நூலின் வழி பதிவாகியிருக்கின்றன.

விகடன் குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்து கொண்டிருந்த விகடன் பேப்பர் நாளிதழில் உலக நடப்புகளை கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்த தொடராக எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதி வந்தார். காக்டெயில் என்ற தலைப்பில் பதிவாகி வந்த இந்தத் தொடர், வாசகர் மத்தியில் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றது. இது வெளிவந்த நாட்களிலேயே, பலரும் இந்தத் தொடர் நூலாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது.

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் நம்மிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இந்த நூல் நீங்கள் பெறுவதற்குரிய விஷயங்களோடு வந்திருக்கிறது. உலகம் என்னதான் மாற்றங்களை அடைந்துகொண்டே இருந்தாலும், மாறாத சில விஷயங்கள் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

நாமும் சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் வாழ்ந்திருக்கக்கூடும் இந்த வாழ்க்கையை.

அட... இது நம்மளகூட க்ராஸ்பண்ணி போச்சில்ல... என்று சில இடங்களை வாசிக்கும்போது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றச் செய்வதே இந்த நூலின் முக்கிய அம்சம்.