book

ஸ்ரீ லலிதா

Shri Lalitha

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். சுதா சேஷய்யன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189936501
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

இரண்டு சகஸ்ரநாமங்கள் மிகவும் பிரபலம். ஒன்று விஷ்ணு சகஸ்ரநாமம். மற்றது லலிதா சகஸ்ரநாமம். சகஸ்ரம் என்றால் ஆயிரம். அம்பிகையின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அவளைப் போற்றுவதுதான் சகஸ்ரநாம வழிபாட்டின் பொருள். ஓராயிர நாமம் உள்ளத்துள் ஏற்றி, மனம் ஒருமுகப்பட்டுத் துதித்தால் நம்மை நோக்கி வரும் இன்னல்கள் மாயும்; இன்பங்கள் கூடும்.
இப்படி மகிமை வாய்ந்த அன்னையின் ஆயிரம் நாமங்களுக்கும் பாஷ்யம் எனப்படும் விளக்கவுரை எழுத ஆதிசங்கரர் முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை. அவர் விஷ்ணு சகஸ்ரநாமத்துக்குப் பொருள் எழுதி, அம்பிகையின் பேரில் அம்பிகையின் நாம மகிமைக்குப் பதிலாக அவளின் அழகு ரூபத்தைப் போற்றி சௌந்தர்ய லஹரி படைத்தார் என்பது வரலாறு.

உலகமே அழகியலின்பாற்பட்டது. அழகும் வீரமும் கருணையும் கொண்ட ஆதிபராசக்தியின் கருணையால் வெளிப்பட்ட உலகில் வாழும், அவளுடைய பிள்ளைகளான நாம், அவளுடைய கருணையையும் மகிமையையும் போற்றி வணங்குவதற்காகவே, அவள் ஆயிரம் நாமம் கொண்டாள் என்பர் பெரியோர்.

கௌலாசாரம் என்று ஒரு வழிபாட்டு முறை உண்டு. சமயாசாரம் என்று ஒரு முறை உண்டு. இந்த இரண்டு முறைகளும் சாதாரணமாக ஸ்ரீவித்யா உபாசனையில் சொல்லப்படுகின்றன. இந்த இரண்டு உபாசனா முறைகளுக்கான திருநாமங்களையும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் காணலாம். அவற்றில் மிகச் சுலபமான வழியாக இருக்கக்கூடியது நாம் இந்த நாமங்களைத் தெரிந்தோ தெரியாமலோ சொல்லக்கூடிய முறை. சில நாமாவளிகளை நாம் உச்சரிக்கும்போது அதனுடைய அர்த்தம் என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால், புரிந்து சொன்னாலும், புரியாமல் சொன்னாலும் நிச்சயம் பலன் உண்டு என்பதை எடுத்துக் கூறியுள்ளார் நூலாசிரியர்.

இந்தத் திருநாமங்களைச் சொன்னால், அதற்குரிய பயன் நிச்சயமாக உண்டு. ஆன்மிக வழிபாட்டு முறைகளையும் இதிகாச தகவல்களையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் இந்நூலில் இடையிடையே எளிய தமிழில் எழுத்து வடிவத்தில் ஏடு புனைந்திருக்கிறார் டாக்டர் சுதா சேஷய்யன். அம்பிகையைப் போற்றும் அனைத்து அன்பர்களுக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.