book

சின்னக்கமலா

₹44+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி.ரங்கராஜன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

யாராவது  உறவினர்களோ போரடிக்கும் நண்பர்களோ வீட்டிற்கு வந்தால் இவுர் பேப்பரும் பேனாவுமாக. சில சமயம் புரூஃப்களுடன் மொட்டைமாடிக்குப் போய் விடுவார். ஒரு சமயம் சொந்தமாக வீடு கட்டினார். எல்லாம் திருமதி ரா. கி. ர.தான் மேற்பார்வை. இப்படி அவர் காரியம் யாவினும் திருமதி கமலா கை கொடுத்ததால், குமுதம் பத்திரிகைக்கு ரா,கி,ர முழுமனதுடனும் முழுமையாகவும் ஈடுபட முடிந்தது. ரா. கி. ர. விற்கு, வீட்டில் நடக்கும் விஷயங்களில் நிறைய விஷயங்கள் தெரியாது.
*                                          *                
நான் டில்லியிலிருந்த போது அவரிடமிருந்து வரும், ஒரு வரி, இரண்டு வரி கடிதங்கள்தான் என் எழுத்து ஆர்வத்திற்கும், வளர்ச்சிக்கும் நீராகவும் உரமாகவும் உதவின. ( “என்ன ஓய், டில்லியில் பூகம்பமாமே., என்ன செய்து கொண்டிருக்கிறீர்? --ராகிர.  இப்படித்தான் இருக்கும் கடிதம்.அவ்வளவுதான். அடுத்த செகண்ட் அரக்கப் பரக்கக் கிளம்பிப் போய் தகவல் திரட்டி, மொபைல் போஸ்டாபீஸில் சாயங்காலம் ஆறு மணிக்குக் கட்டுரையை அனுப்பிவிடுவேன்.  அடுத்த நாள் காலையில் என்  கட்டுரை குமுதம் ஆபீசுக்குப் போய் சேர்ந்துவிடும். (அடுத்த நாளே வா என்றெல்லாம் கேட்காதீர்கள். அது ஒரு பொற்காலம்!)

ஒரு சமயம் ரா. கி. ர. என் னை வீட்டிற்கு அழைத்திருந்தார். ”ராத்திரி சாப்பிட வந்து விடுங்கள். உங்களுக்காக நான் ஆபீஸிலிருந்து சீக்கிரம் வந்து விடுகிறேன்” என்றார்.