book

கம்பன் கண்ட தாயுள்ளம்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பால.இரமணி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2004
Out of Stock
Add to Alert List

மக்கள் நால்வரிலும் எந்தவிதமான வேறுபாடும் காணாதவள் இராமனும் தூய சிந்தையுடன் தனது தாயிடம் “நின் காதல் திருமகன் பங்கமில் குணத்து எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றான்' என்று தாயிடம் கூறுகிறான். கோசலையும் எந்த வேறுபாடும் காட்டாமல் 'முறைமை அன்றென்பது ஒன்றுண்டு; மும்மையின் நிறை குணத்தவன், நின்னினும் நல்லனால் குறைவிலன்; எனக்கூறினள் நால்வர்க்கும் மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றினான்” "என்று பின்னரும், மன்னவன் ஏவியது அன்று எணாமை, மகனே உனக்கு அறன்; நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து ஒன்றி வாழுதி, ஊழிபல; என்றான்” இவ்வாறு கூறி இராமனை வாழ்த்தினாள். அதன் பின்னர் இராமன் தனது தாயிடம் நான் நன்னெறி உய்ப்பதற்கு மற்றுமொரு பணியையும் மன்னவன் ஏவியுள்ளான்” என்று கூறினான் நான் ஏழிரண்டு ஆண்டுகள் காட்டிற்குச் சென்று திரும்ப வேண்டும் என்று கூறினான். அதைக் கேட்ட உடனே கோசலை துன்பமும் துயரமும் அடைந்தாள்