book

வெகுளிப் பெண்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோதிர்லதா கிரிஜா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :199
பதிப்பு :1
Published on :1992
Add to Cart

ஜோதிர்லதா கிரிஜா தமிழக எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள், வசன கவிதைகள் எனப் பலதும் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு என்ற ஊரில் 1935 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தை ஒரு பள்ளி ஆசிரியர்.[1] பள்ளிப் பருவத்தில் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனார். இவரது முதல் சிறுகதை 1950 ஆம் ஆண்டில் "ஜிங்லி" என்ற பத்திரிகையில் ரா. கி. ரங்கராஜன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.[1] தொடர்ந்து கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை ஆகிய இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன.[1] 1968 இல் ஆனந்த விகடனில் எழுதிய கலப்பு மணம் பற்றிய அரியும் சிவனும் ஒண்ணு என்ற சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக பெரியோர்க்கான எழுத்தாளராக அறியப்பட்டார்.[1] தபால், தந்தி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
‘நம் நாடு’ எனும் சிறுவர் புதினம் உக்ரைனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.[2]

1975 இல் ஃபெமினாவில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். இவரது ஆக்கங்கள் டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET இதழில் தொடர்களாக வந்துள்ளன. விம்ன்ஸ் எரா, தி இந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் எழுதியுள்ளார்