book

பணம் செய்ய விரும்பு

Panam seyya virumbu

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகப்பன் - புகழேந்தி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பங்குச்சந்தை
பக்கங்கள் :160
பதிப்பு :5
Published on :2009
ISBN :9788189936440
குறிச்சொற்கள் :பணம், தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், நிறுவனம், சிந்தனை
Out of Stock
Add to Alert List

உலக வாழ்வில் பணம் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. இந்த வியாபார உலகத்தில் மனித இருத்தலுக்குப் பணமே பிரதானம் என்பதால் மக்கள் இரவு பகல் பாராமல் பொருள் தேடி பயணிக்கின்றனர்.
கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு, முக்கியப் பங்கு வகிக்கும் பணத்தை சேர்த்துவைக்க எண்ணியவர்கள் பலர். அந்த எண்ணத்தைச் செயலாக்கியவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர். எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, உழைத்து பெரும் பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது என்று விழிக்கும் பலருக்கு வழிகாட்டவே ஆனந்த விகடன் இதழில் 'பணம் செய்ய விரும்பு' என்னும் தொடரை வழங்கினார்கள் நாகப்பன் _ புகழேந்தி. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, மேலும் பெருக்க வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன? அதனை எவ்வாறு செய்ய வேண்டும்? எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன? அவற்றின் சாதக, பாதக நிலைகள் என்னென்ன? போன்ற சிறப்பான தகவல்களைத் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கின்றனர் நூலாசிரியர்கள்.

நாணயம் விகடன் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில், நாகப்பன் _ புகழேந்தி பங்கேற்று, மக்கள் பொருளாதார மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகளை வாசகர்களுக்குச் சொல்லித் தருகின்றனர். அந்தக் கூட்டத்தில், வாசகர்களுடன் நடந்த உரையாடல்கள் இந்தப் புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

கோடீஸ்வரராக எந்த வழியில் செல்வது நல்லது? என்பதில் தொடங்கி, குடும்ப உறுப்பினர்களான அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் என அனைவரையும், பொருளாதார இலக்கை நோக்கிய பயணத்தில் எவ்வாறு சேர்த்துகொள்வது? ஒவ்வொரு முதலீட்டு நிறுவனங்களின் திட்டங்களில் எவ்வாறு பங்கேற்பது? பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களின் போது என்ன செய்ய வேண்டும்? போன்ற அற்புத தகவல்களை வாசகர்களின் அருகில் அமர்ந்து பேசுவதுபோல சிறப்புடன் தந்துள்ளனர். எழுத்தாக்கம் செய்துள்ளார் தளவாய் சுந்தரம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லப்படும் குட்டிக் கதைகள் சுவாரஸ்யமானவை.