book

இல்லம்தோறும் இதயங்கள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சமுத்திரம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :6
Published on :2005
Add to Cart

வந்துட்டா, என்ன பண் ண முடியும் வெள்ளம் வருமுன்னே அணை போடாண்டாமா? ஏய் லட்சுமி ! ரமா, சேகரோட பேசாம வீட்டுக்கு வந்துரு ! நீ வாழ்ந்தது போதும்!"
லட்சுமியே தந்தைக்குப் பதில் கொடுத்தாள்.
"ஒங்க வேலய பாத்துக்கிட்டு போங்கப்பா. அவங்க படிச்ச ஆம்பிளைங்க. அவங்களுக்குத் தெரியாதா? ஒருவருக்கு ஏதோ ஒண்ணு வந்துட்டு என்கிறதுக்காக, அதையே பிடித்துக்கிட்டு இப்படியா குதிக்கது?”
ராமபத்திரன் மகளை முறைத்துப் பார்த்தபோது, லட்சுமியின் கணவன் சங்கர் "அப்படியே பேசினாலும் இப்படியா சத்தம் போட்டுக் கத்தறது? இவரு போடுற கூச்சலுல இந்த அரக்கோணம் முழுசும் கேட்டிருக்கும்" எனறாா.
பேத்தி ரமாகூட, தாத்தா எதையோ சொல்லக் கூடாததை சொல்லிவிட்டார் என்பதுபோல முறைத்துப் பார்த்தாள். நாலு வயதுப் பயல் சேகருக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் ஒன்று புரிந்தது. தாத்தா அங்கே நிற்கக்கூடாது. நிற்கவே கூடாது.