book

வானம் பார்த்த பூமி

Vaanam Paartha Boomi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வஞ்சி கருப்புசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123411118
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல், புதினம்
Add to Cart

செம்மண் பிரதேசத்தின் புழுதியாட்டின் பாசனன்யை தன் சுவாசத் தரையில் படியவிட்டுக்கொண்டு சாய்ந்த ஒரு புழுதி மனிதலின் கடைசி உயிர்த்துளி பழுத்து மண்ணில் விழப்போரும் தறுவாயிலிருந்துகொண்டு உடைந்த வார்த்தைகளாய் தன் மகளிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறாள் இப்படி: “நான் போயிட்டா வானம் பார்த்த பூமி விலைக்கு விற்றுப் போடாதையம்மா. என் நினைவுச் செல்வமா நீ வைச்சுக்கோ, மண்தான் என் உசுரு" என்று விட்டு அம்மண்ணிற்குச் சொந்தக்காரனான வஞ்சி முத்துவின் உசுரு பிரிகிறது. கொங்கு நாட்டின் மண்ணையும், மண்னைச் சார்நித வட்டாரச் சொற்களையும் கொண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி நம்முள்ளே உயிரோட்டமாய் நடமாட விட்டுருக்கிறார் நூலாசிரியர், ஏக்கர் கணக்கில் பயிர் செய்து அறுவடைக்கு ஆளில்லாமல் கிடக்கிறது நன்செய் நிலம். இந்த பரிதாபத்துக்குக் காரணம் நாகரிக வளர்ச்சி என்றே கூறலாம். ஆசைகளின் உச்சம் என்றே பேரிடலாம். பாட்டனும் முப்பாட்டனும் பரம்பரை பரம்பரையாய் கட்டிக்காத்து வந்த விவசாய நிலம் இன்று அபார்ட்மென்ட்டுகளாலும், விளையாட்டு மைதானங்களாலும் நிரப்பப்படுவதற்கு ஏது காரணம்? தமிழர் பண்பாட்டின் விளை நிலமாக போற்றப்படும் வயல்காடுகள் தொழிற்சாலைகளுக்குக் காவு கொடுக்கும் பலிபீடமாய் மாறி வருகிறதே என ஒருபுறம் ஆதங்கப்படவேண்டியிருக்கிறது. இனி: மனிதன் பசிக்குப் பதில் மாத்திரைகளே உணவாய் உட்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.