book

சிவாஜிராவ் டூ சிவாஜி

Sivajiraav to sivaji

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருவாரூர் குணா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936396
குறிச்சொற்கள் :ரஜினி, சூப்பர் ஸ்டார், திரைப்படம், நடிகர்
Add to Cart

சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்.
ஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது பாரம்பரியமான நாடகத்திலிருந்து வந்தவர் என்பதால் தமிழ்த்திரையுலகம் அவரை எளிதில் வாரி அணைத்துக் கொண்டது. ஆனால், வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்... வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்... வசதி வாய்ப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாதவர் என்கிற பட்சத்திலும்கூட, தமிழ்த் திரையுலகத்தில் நின்று, நிதானித்து வெற்றிக்கொடி நாட்டிய பெருமை சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்தையே சாரும்.

பல போராட்டங்கள், சங்கடங்களுக்கு இடையிலும், கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், கலைஞானம் போன்ற திறமையாளர்களின் ஆதரவோடு இன்று திரைத்துறையில் யாரும் எதிர்பார்த்திராத இடத்தைப் பிடித்திருக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்று தமிழக அரசியல் சூழலே முன்வந்து எதிர்பார்க்கிறது.

1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ரஜினி பின்னணியில் இருந்து வாய்ஸ் கொடுத்ததற்கே ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது என்றால், மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அவருடைய செல்வாக்கு எத்தகையது என்று சுலபமாக தீர்மானித்துவிட முடியும்.

இத்தகைய செல்வாக்கை சிவாஜிராவ் எப்படிப் பெற்றார், அவர் ரஜினிகாந்த் ஆன கதை என்ன... என்று அவரோடு நெருங்கிப் பழகி பணியாற்றிய திரைத்துறையின் பிரபலங்கள், பல்வேறு புதிய தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் பகிர்ந்துகொண்டார்கள். ரசிகர்களும் தங்களின் பார்வையில் ரஜினியைப் பற்றி பல சுவாரசியமான சம்பவங்களை சொன்னார்கள்.

அந்தக் கட்டுரைகள் இப்போது சிவாஜிராவ் டூ சிவாஜி என்கிற பெயரில் நூலாகி இருக்கிறது. ரஜினியின் திறமைகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது இந்நூல்.