-
பணத்தைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் நிறைவேற்றலாம் என்று கேட்டால், இந்த உலகத்தை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கும். ஒரே இடத்தில் மட்டுமே இருந்து சஞ்சலப்படாமல் புதுப்புது இடங்களைக் கண்டுகளித்து மனதை ஆசுவாசப்படுத்தவும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் பலரும் நினைக்கின்றனர். சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் அமெரிக்காவைப் பற்றிய செய்திகளை தினந்தோறும் ஊடகங்களின் மூலம் கண்டும் கேட்டும் வருகின்றோம். அதனை நேரில் சென்று பார்த்தால் மனதில் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.
அமெரிக்காவின் முக்கிய இடங்களான ஃப்ளோரிடா, வாஷிங்டன், சௌத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள மனதைக் கவரும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று பார்த்த பொறியாளர் கமலநாதன், அந்த அனுபவத்தை சுவாரஸ்ய மொழி நடையில் சுட்டிகளுக்கும் புரியும்படி சுட்டிவிகடன்_ல் எழுதினார். அதுவே இந்த 'சுட்டிகளின் உலகம்' பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உயிர்பெற்று வந்ததுபோல நம்முடன் கை குலுக்கும் டிஸ்னி உலகம், குட்டி யானைகள் ஆற்றில் குளித்து அமர்க்களப்படுத்தும் ஜங்கிள் க்ரூஸ், திகிலடைய வைக்கும் பேய் பங்களா, விண்வெளி ஓடங்களையும் அதன் நுட்பங்களையும் வெளிப்படுத்தும் கென்னடி விண்வெளி மையம், டைனோசர் போன்ற அரிய உயிரினங்களைப் பற்றி அற்புத தகவல்களைத் தருவதுடன் எரிக்கற்கள், பூகம்பங்கள் ஏற்படுவது குறித்த செய்திகளைத் தரும் நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியம் போன்றவற்றை சுற்றுலா வழிகாட்டி போல விளக்கங்கள் சொல்லி சுற்றிக்காட்டுகிறார்.
மேலும், சுட்டிகள் விளையாடி மகிழும் உபகரணங்கள் கொண்ட கஹகன் பார்க், அமெரிக்காவில் இருந்த அடிமைமுறை பற்றியும் சுதந்திரப் போர் பற்றியும் அமெரிக்கச் சரித்திரங்களைச் சொல்லும் சார்ல்ஸ்டன் பாட்டரி பார்க், அமெரிக்காவில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஆர்வமுடன் கொண்டாடும் ஆவிகள் தினம், சுதந்திரதேவி சிலை அமைக்கப்பட்ட வரலாறு போன்றவற்றை அற்புதமாகப் பதிவுசெய்துள்ளார். பிரமாண்ட நாடான அமெரிக்காவை நேரில் பார்க்கும் குதூகலத்தைத் தருகிறது இந்நூல்...
-
This book chutigalin ulagam is written by Kamalanathan and published by Vikatan Prasuram.
இந்த நூல் சுட்டிகளின் உலகம், கமலநாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, chutigalin ulagam, சுட்டிகளின் உலகம், கமலநாதன், Kamalanathan, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Kamalanathan Siruvargalukkaga,கமலநாதன் சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kamalanathan books, buy Vikatan Prasuram books online, buy chutigalin ulagam tamil book.
|