book

ராஜ பேரிகை

Rajaperigai

₹500
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :572
பதிப்பு :27
Published on :2016
Out of Stock
Add to Alert List

நீண்ட நாட்களாக என் மனத்தில் ஒரு சந்தேகம் உறுத்திக் கொண்டிருந்தது. எல்லா வளப்பங்களும் உடைய இந்தப் பாரத பூமி சந்திரகுப்தன் ,அசோகன் போன்ற ஏகசக்ராதிபதிகளையும்,ராணா பிரதாப்சிங், சிவாஜி போன்ற சிறந்த வீரர்களையும் பெற்றிருந்த இந்தப் பெரிய புண்ணிய பூமி, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயரிடம் எப்படி அடிமைப்பட்டது?
வியாபாரிகளாக இங்கு வந்த ஒரு சிறு கூட்டத்தால் இங்கு எப்படிப் பெரிய சாம்ராஜ்யத்தை அமைக்க முடிந்தது? இப்படி யெல்லாம் நினைத்தேன். அதனால் அதைப்பற்றி ஆராய்ச்சியிலும் இறங்கினேன். அந்த ஆராய்ச்சியின் விளைவுதான் 'ராஜ பேரிகை.''
ஆங்கிலேயர்களைப்பற்றிப் பல குறிப்புகளைப் பல அந்தப் புத்தகங்களில் நமக்குப் போதிக்கப்பட்டதெல்லாம் லண்டனில் காலாடியாகத் திரிந்த கிளைவ் என்பவன் இங்கே குமாஸ்தாவாக வந்து முந்நூறு சிப்பாய்களைக் கொண்டு ஆற்காட்டைப் பிடித்து, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு வித்திட்டான். அந்த முந்நூறு தமிழ்ச் சிப்பாய்களும் தாங்கள் கஞ்சியைக் குடித்துச் சோற்றைப் பிரிட்டிஷ் சோல்ஜர்களுக்கு ஊட்டி உதவினார்கள்' என்ற கதைதான்.