book

தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள் தொகுதி 3

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தென்கச்சி கோ.சுவாமிநாதன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நீதிகதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :11
Published on :2017
Add to Cart

அரசாங்க உத்தியோகம் பார்க்கற ஒருத்தர் பகவத் கீதையை படிச்சிக்கிட்டு உக்கார்ந்திருந்தார். ''சார் நீங்கள் பார்க்கற உத்தியோகத்துக்கும் படிக்கிற புத்தகத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இருக்கிறதா தெரியலையே ...!'' - ன்னேன்.

"என்ன அப்படி சொல்லிட்டீங்க..... இதுலே கர்மயோகத்தைப் பத்தி பேசும் போது மூணு தத்துவங்கள் வலியுறுத்தப்படுது ..... நிர்வாகிகள்லாம் அதைக் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டா நல்லது!'' - அப்படின்னார்.

''அது என்னங்க..... மூணு தத்துவங்கள்?'' - ன்னேன். அவரு சொல்ல ஆரம்பிச்சார்.

எதிலும் பற்றற்று இருத்தல் - இது ஒரு தத்துவம்.

பலனை எதிர்பார்த்துச் செய்யாமை - இது ஒண்ணு .

எதையும் ஈஸ்வர அர்ப்பணமாகச் செய்யறது - இது மூணாவது!'' - அப்படின்னார்.

எனக்கு ஒண்ணும் புரியலே.

"இதுக்கும் நிர்வாகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?'' - ன்னேன்.

''விவரமா சொல்றேன் கேளுங்க" - ன்னார். அப்புறம் சொன்னார்.

முதல் கருத்து என்ன?

எதிலும் பற்றற்று இருத்தல்!

ஒரு அலுவலக மேலாளர் யார் மேலேயும் பற்று கொள்ளாமே எல்லாரையும் சரி சமமா நடத்தணும். இவரு நமக்கு வேண்டியவர்...... அவரு நமக்கு வேண்டாதவர் .... அப்படிங்கற எண்ணம்லாம் அவருக்கு வரப்புடாது. ஒரு ஆபீஸ்ன்னு இருந்தா அங்கே கோள் சொல்றதுக்குன்னு சில பேர் இருப்பாங்க... திறமையா வேலை செய்யற வங்களைப் பத்திக் கூட இவங்க மோசமா அதிகாரிகள் கிட்டே சொல்லி வச்சிடுவாங்க! மேலே இருக்கிறவர் இதைக் கேட்டு நடக்க ஆரம்பிச்சா.... வேலை தான் வீணா போவும்!

சரி! இப்ப அந்த ரெண்டாவது தத்துவத்துக்கு வருவோம். அது என்ன சொல்லுது?

பலனை எதிர்பார்த்து எதையும் செய்யாதே! அப்படின்னா பலனே வேண்டாம் - ன்னு இதுக்கு அர்த்தம் பண்ணிக்கப் புடாது !

லாபம் வந்தாலும் சரி.... நஷ்டம் வந்தாலும் சரி.... மனசு ஒரே சீரா இருக்கணும். நஷ்டம் வந்தா... அதுக்கு என்ன காரணம்ங்கறதை ஆராயணும். அதை விட்டுட்டு .... மனசு சோர்ந்து போய் உக்கார்ந்துடப்புடாது .... அல்லது வேலை செய்யறவங்களை வீட்டுக்கு அனுப்பலாமான்னு யோசிக்கப்புடாது!

அதே மாதிரி லாபம் வந்தா அதுக்காக துள்ளிக் குதிச்சிக்கிட்டு இருக்கப் புடாது. அப்படி செய்யறப்போ கவனக் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இது, அடுத்த வருஷ நஷ்டத்துக்குக் காரணமா கூட ஆயிடும்.....

மூணாவது தத்துவம் என்ன சொல்லுது? எதையும் ஈஸ்வர அர்ப்பணமாகச் செய்தல்.

ஓர் அலுவலகத்துலே வேலை பார்க்கும் ஒருத்தர்கிட்டே போய் .... "நீங்க யாருக்காக வேலை செய்யறீங்க?''ன்னு கேட்டேன்.

"என்ன சார்..... இப்படி கேக்கறீங்க... நான் எனக்காகத் தான் வேலை செய்யறேன்....!'' - ன்னார். "அப்படியா சொல்றீங்க?"ன்னேன்.

ஆமாங்க! ஒண்ணாம் தேதி சம்பளம் வாங்கறேன் லே.... அதுக்காகத் தான் வேலை செய்றேன்!'' - ன்னார். சம்பளத்துக்காக வேலை செய்யறோம்ன்னு நினைக்காமே

இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக வேலை செய்யறோம்ங்கற நினைப்பு வரணும். அதன் மூலமா இந்த நாட்டை வளப்படுத்தறோம் - ங்கற நினைப்பு வேணும். ஈஸ்வர அர்ப்பணம் ன்னா அது தான். செய்யும் தொழிலே தெய்வம்!

இவ்வளவையும் அந்த நண்பர் என்கிட்டே விவரமா சொல்லிபுட்டு இப்ப சொல்லுங்க சார்..... கீதையின் கர்ம யோகத்துக்கும் காரியாலய நிர்வாகத்துக்கும் சம்பந்தம் உண்டா .... இல்லையா?'' - ன்னார்.

நீங்க சொல்றது சரி தான்...னு சொல்லிட்டு எழுந்திரிச்சேன். வெளியிலே வந்தேன் .... நினைச்சுப் பார்த்தேன்.

இன்னைக்கு ஆபீஸ்லாம் இப்படியா இருக்கு? ஒருத்தர் கேட்டார்:

''என்னங்க இது ... உங்க ஆபீஸ் வருகை பதிவு ரிஜிஸ்டர் லே பென்சிலை கட்டிப் போட்டிருக்கீங்க..... இதையெல்லாம் கூடவா திருடிகிட்டுப் போயிடுவாங்க... அப்படின்னார்.

"இது 36வது பென்சில் !" - அப்படின்னார் அவர்.

''எங்க ஆபீஸ்லேயும் கூட பென்சில் திருட்டுப் போறது உண்டு ..... ஆனா அதை இப்படி ரிஜிஸ்டரோட கட்டிப் போடறதில்லே!'' - ன்னார் இவர்.

'ஏன்?'' -னு கேட்டார். ''அப்படி செஞ்சா ரிஜிஸ்டரையும் சேர்த்துத் தூக்கிக்கிட்டுப் போயிடறாங்க சார்.....!'' அப்படின்னார் இவர்.