book

திருப்புகழ் விரிவுரை மூன்றாம் தொகுதி பழநி

₹370+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமுருக கிருபானந்தவாரியார்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :564
பதிப்பு :13
Published on :2017
Out of Stock
Add to Alert List

இந்த நூல் திருப்புகழ் விரிவுரை (பழநி/ திருவாவினன்குடி/ மூன்றாம் படைவீடு), திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 
 
ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்களுக்கு 31 ஆண்டுகளாகத் திருப்புகழமிர்தம் என்ற மாத வெளியீட்டில் உரை எழுதினேன்.
 
மேற்படி திருப்புகழமிர்தத்தில் வெளி வந்த உரைகளில் விநாயகர்துதி, நூல், முதற் படை வீடாகிய திருப்பரங்குன்றம் ஆகியவற்றின் திருபுகழ்ப் பாடல்கள் 20-க்கும் விரிவுரைகள் முதல் தொகுதியாகவும் இரண்டாவது படைவீடாகிய திருச்செந்தூர்த் திருபுகழ்ப் பாடல்கள் 83-க்கும் உரிய விரிவுரைகள் இரண்டாம் தொகுதியாகவும் வெளிவந்தன.
 
மூன்றாவது படைவீடாகிய பழநி (திருவாவினன்குடி) திருப்புகழ்ப் பாடல்கள் 97-க்கும் விரிவுரைகள் மூன்றாம் தொகுதியாக இப்போது வெளிவேறுகிறது.
 
பழநி என்னும் திருத்தலம் திண்டுக்கல் ஜங்ஷனுக்கும், கோயமுத்தூர் ஜங்ஷனுக்கும் இடையில் உள்ளது. ரெயில் மூலமாகவும் பஸ்களிலும் செல்லலாம். எல்லா வசதிகளுடனும் கூடிய நகரம்.
 
இது மணிபூரக க்ஷேத்திரம், பெரும் புகழையுடையது. சிவ மலை என்னும் பெயரும் பூண்டது. பல சித்தர்களும், முத்தர்களும் வாழ்கின்ற மகிமையுடையது. போக முனிவர் அருள் பெற்ற தலம். ஞான தண்டினை ஊன்றிய முருகன் பாலவடிவுடன் எழுந்தருளிய ஞானமலை. "அதிசயம் அநேகம் உற்ற பழநி" என்று சுவாமிமலைத் திருப்புகழிலும் வருகிறது. இன்னும் பழனியின் பெருமைகளை "பதினாலு உலகோர் புகழ் பழநி" (60) "காசிய மீறிய பழநி" (82) "பிரகாசம்புரி பழநி" (83) என்றும். திருவாவினன்குடியின் பெருமைகளை (10) (12) ஆகிய பாடல்களின் விரிவுரைகளிலும் கூறப்பட்டுள்ளது.
 
நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் இத்தலத்தைப் பற்றி 51 வரிகளில் வியந்து கூறியுள்ளார்.
 
இந்தப் பழநித் திருப்புகழ் விரிவுரை நூலை வானதி பதிப்பகத்தார் வெளியிடுகின்றார்கள். வானதி பதிப்பகம் உத்தமமான உள்ளன்புடன் சமயத்துக்கும், தமிழுக்கும் அயராது தொண்டு புரிகின்றது.
 
திருவருள் துணையினால் நான்காவது படைவீடாகிய சுவாமிமலைத் திருப்புகழ்ப் பாடல்கள் 38-க்கும் விரிவுரை எழுதி - நான்காம் தொகுதி அண்மையில் வெளிவந்துள்ளது.
 
ஐந்தாம் படைவீடாகிய குன்றுதோறாடல் முதற்பகுதி 114 திருப்புகழ்ப் பாடல்கள் விரிவுரைகளும் அதன் இரண்டாம் பகுதிக்கு விரிவுரைகளும் மற்றப் பகுதிகளும் இறைவன் அருளால் விரைவில் வெளிவரும்.
 
இத்தகு வித்தகம் நிறைந்த திருப்புகழ் விரிவுரைகளை அன்பர்கள் ஓதி உணர்ந்து, எல்லா நலன்களையும் பெற, எம்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்.
 
அன்பன், 
கிருபானந்தவாரி 
17.10.79
சென்னை.
                                                         
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.