book

கதைக் கணக்குகள்

Kathai Kanakkugal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மெ. மெய்யப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413877
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

அறிவியல் நம் அன்றாட வாழ்க்கையில் மேலும் மேலும் அதிகப் பங்கேற்று வருகின்றது என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். அறிவியலைப் புறக்கணித்துவிட்டு ஒரு நிமிட நேரத்தைக்கூட நிம்மதியாகக் கழிக்க முடியாது என்பது இன்றைக்கு நம் எல்லோருடைய நிலைமை. அறிவியல் அப்படி நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டதால், அறிவியல் இல்லையேல், வாழ்க்கையே இல்லை எனும் அளவிற்கு அறிவியல் ஒரு தனித் தகுதி பெற்றுவிட்டது.

 இன்றைக்கு அறிவியல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொறியியல், எலக்ட்ரானியல், விண்ணியல் என்று பல பிரிவுகளாக விரிந்து வளர்ந்திருக்கின்றது. இப்படி ஆலமரமாய்ப் பரந்து விரிந்த அறிவியலுக்கு கணக்கே மூலவித்து. அதனால்தான் '' அறிவயிலின் தாய் கணக்கு '' என்று அறிஞர்கள் முன்மொழிந்தார்கள் போலும்.