book

ஒற்றைக்கால் பறவை

Otraikaal Paravai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கமலவேலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :114
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123405988
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Out of Stock
Add to Alert List

நாடகங்களில் கூறப்படும் நல்ல கருத்துக்கள் பார்வையாளர்களின் மனங்களில் பதிந்து திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன என்பது திட்டவட்டமான உண்மை. தேசத்தந்தை மகாத்மா காந்தி கூட அரிச்சந்திரன் நாடகத்ததைப் பார்த்த பிறகுதான் எந்த வடிவில் சத்திய சோதனைகள் வந்தாலும் உண்மையே பேசவேண்டும் என்று உறுதிபூண்டதாகக் கூறியுள்ளார்.

 கருத்தாழமிக்க நாடகங்களை எழுதிப் பாராட்டுகள் பெற்றவர் எழுத்தாளர் திருமிகு. கமலவேலன். அவரது நாடகங்கள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இடம் பெற்றுள்ளன. சிறுகதை, சிறுவர் இலக்கியம், பொது அறிவுக் கட்டுரைகள், நாடகங்கள் எனப் பல நூல்களை அவர் படைத்துள்ளார்.

 நறுக்குத் தெறித்தாற்போல் உரையாடல்கள் அமையப்பெற்ற அவரது நான்கு நாடகங்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன. பார்ப்பவரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடகங்கள் படிப்பவரையும் அப்படியே பதப்படுத்தும்.