book

நேற்றைய காற்று

Netraya kaatru

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யுகபாரதி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936280
குறிச்சொற்கள் :திரைப்படம், பாடல்கள், தகவல்கள், சரித்திரம், இயக்குநர்
Out of Stock
Add to Alert List

இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீறி உதடுகளை முணுமுணுக்க வைத்துவிடும். கருத்தாழமிக்க, ரசனையைத் தூண்டும் அற்புதமான பாடல் வரிகளை தமது கற்பனை வளத்தாலும் எழுத்துத் திறமையாலும் கவிஞர்கள் நமக்களித்துள்ளனர். இன்பமான நேரங்களில் மட்டுமல்ல, கவலையுறும் நேரங்களிலும் நமது மனத்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் மருந்தாக திரையிசைப்பாடல்கள் திகழ்கின்றன.
தேனிசைத் தென்றலாக, இன்னிசை கீதமாக பாடல்களை உருவாக்கிய தமிழ்த் திரையுலகக் கவிஞர்களின் சொந்த வாழ்க்கைச் சூழலைப் பற்றியும், திரையுலகுக்கு அவர்கள் அறிமுகம் ஆன விதம் மற்றும் அவர்களின் கவித்திறன் பற்றியும் இந்நூலாசிரியர் இந்த நூலில் வழங்கியுள்ளார்.

தியாகராஜ பாகவதர் காலம்தொட்டு இன்று வரையுள்ள பாடலாசிரியர்களில் மிகப் பிரபலமானவர்களைப் பற்றியும், அவர்களின் எழுத்துநடை எப்படியெல்லாம் நெஞ்சை நெகிழவைக்கும் தன்மையோடு அமைந்திருந்தன என்றும் சில பாடல்களின் உதாரணங்களோடு அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார். காலத்தால் அழியாத கவிதை வரிகளுக்கு மெட்டமைத்து பாடல்களாக நிலைபெற சுவைகூட்டிய இசையமைப்பாளர்கள் சிலரையும் ஆங்காங்கே நினைவுகூர்ந்துள்ளார்.

பாடலாசிரியர்கள் வரிசையில் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியம், புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, கா.மு.ஷெரீப், பஞ்சு அருணாசலம், நா.முத்துலிங்கம் போன்றவர்கள் வளர்த்த சமூக இலக்கிய நயத்தைப் படிக்கும்போதே கடந்தகாலச் செழுமை நம் கண்களில் தெரிகிறது.