book

குறையொன்றுமில்லை நான்காம் பாகம்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சார்யார்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :280
பதிப்பு :15
Published on :2016
Add to Cart

ஆழ்வார் அண்டக் குலத்துக்கு அதிபதி பரமாத்மா என்கிறார் . அண்டம் என்றால் மேலே ஏழு லோகங்களும் கீழே ஏழு லோகங்களும் பதினான்கு உலகங்கள் சேர்ந்தது . அண்டம் என்றால் முட்டை - முட்டை வடிவில் இருக்கின்றன . இந்த பதினான்கு லோகங்களும் சேர்ந்த அமைப்பு . அதற்கு வெளியிலே ஆவரண ஜலம் என்று இருக்கிறது .. கர்பத்தில் குழந்தையைச் சுற்றி ஜலம் இருக்கிறது - திரவம் . திரவத்தில் அந்த சிசு இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு எந்த அடியும் படாமல் திரவம் காக்கிறது . அதே போல் அண்டம் அனர்த்தப்படாமல் இருக்க அண்டத்துக்கு வெளியே ஜலம் இருக்கிறது .
பகவான் திரிவிக்ரமனான அவதாரம் பண்ணிய போது இந்த அண்டத்தையெல்லாம் தாண்டி, சத்தியலோகத்தையும் தாண்டி, அந்த ஆவரண ஜலத்தை போய் அவன் திருவடி கிழித்தது. அதிலேயிருந்து அவன் திருவடியில் ஜலம் விழுந்தது என்றால், எவ்வளவு தூரம் அவன் திருவடி யானது போயிற்று என்பதை நாம் உணர முடியும் .
இது ஓர் அண்டம்தான்.. இத்தகு சரியாக போய் விடவில்லை. இந்த மாதிரி எத்தனையோ அண்டகடாகங்கள்....பிரும்மாண்டம் என்று பெயர் அதில் பலா பல உள்ளன . பதினான்கு புவனா காண்டம் ஒரு அண்டம் என்றால் இது மாதிரி பல உள்ளன .
' அண்டக் குலத்துக்கு அதிபதியாகி' என்று அத்தனைக்கும் அதிபதி அவன்தான். சமஸ்தத்தையும் காக்க அந்த துஷ்ட பிரபத்திகளை நிரஹஸித்தவன் .
' அண்டக் குலத்தில் உள்ளீர்...!'
- அவன் திருவடியை த் தொழும் படியான அண்டக் குலத்தில் இருக்கக் கூடியவர்களே . இங்கே வந்து, ஆயிரம் நாமம் சொல்லி ... அவனிடத்திலே அடிபணிந்து பிறவியில்லாத உயர்ந்த நிலையை அடையுங்கள்