book

உப்புவயல்

Uppuvayal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீதரகணேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :190
பதிப்பு :5
Published on :2008
ISBN :9788123403755
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

தோழர் ஸ்ரீதர கணேசன் தூத்துக்குடிக்காரர். பல நூறு ஆண்டுகளாகத் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்கல்களையும், சுரண்டல்களையும், எதிர்த்துப் புரட்சிப்போர் தொடங்கியுள்ள இந்திய நீக்ரோக்களான தலித் குடியில் பிறந்தவர் இளைஞர். பெரிய படிப்போ, உத்தியோகமோ, வேறு வசதியோ வாய்க்காதவர். தொழிலாளி, தமிழ் இலக்கிய உலகுக்குப் புதியவர்.

 உப்புவயல் இவருடைய முதல் நாவல் உப்பளத் தொழிலாளர்களாக உருமாறியுள்ள தூத்துக்குடி வட்டார அரிசன சகோதரர்களின் வாழ்வைச் சித்திரிக்கும் நாவல், ஒதுக்குப்புற விளிம்பில், மக்கிப்போன சேரியில் வாழும் இவர்களின் நம்பிக்கைக் கனவுகளை வேகமாக வளர்ந்து வரும் புதிய முதலாளித்துவம் எப்படியெல்லாம் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது என்பதைச் சொல்லுகிறது இது.