book

உபநிஷதப் பலகணி

₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜாஜி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :77
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List

நம்மில், புதுவகை அறிவு நூல்களைக் கற்றவர்கள். நமக்குரிய பூர்வீக தரும நூல்களைப் படியாமலிருப்பது பலவிதத் தீமையை விளைவித்து வருகிறது. பிற தேசங்களில் இவ்வாறில்லை; படித்த கூட்டம் தங்களுடைய சமூகத்தார். பின்பற்றும் மதநூல்களை அங்கே புறக்கணிப்பது கிடையாது. அதனால் அந்த நாட்டாரின் தரும முறைகள் முற்போக்காளர் காப்பில் இருந்துவருகின்றன. ஹிந்து தருமம் சீர்கெட்ட நிலையிலிருப்பதற்கு ஒரு பெரிய காரணம், நம்முடைய தேசத்தில், மதநூல் புலவருக்கும் மற்றவகைக் கல்வியடைந்தவர்களுக்கு மிடையில் ஏற்பட்டிருக்கும் பிரிவே. நம்முடைய முன்னோர்கள் எழுதி வைத்திருக்கும் அரிய தரும நூல்களைப் புதுவகை அறிவு பெற்றவர்கள் படித்து வைதிகர்களைப்போல் தாங்களும் அவைகளை ஆராய்ந்து பொருள் உரைக்கத் தகுதிபெற்றால், சமுதாயமும் மதமும் வேறு முயற்சியின்றியே தாமாகத் திருந்திவிடும். இதற்காகக் கலாசாலை மாணவர்கள் தங்களுடைய முக்கியமான கடமைகளுள் இதையும் சேர்த்துக்கொண்டு, நம்முடைய பழைய நூல்களை நன்றாய்க் கவனித்துப் படிக்க வேண்டும்; படித்துச் சமூக முன்னேற்றத்திற்காகத் தொண்டு செய்யவேண்டும். ஹிந்து தருமத்திற்குப் பிரமாண நூல்களுள் முக்கியமானவை உபநிஷத்துகள். உபநிஷத்துகளில், சீடன் குருவினிடம் மிக நெருங்கி உட்கார்ந்து விஷயம் கேட்டுத் தெரிந்துகொள்ளுகிற முறையில் ஆத்மஞானம் போதிக்கப்படுகிறது. அக்காலத்து வாழ்வு நாம் இந்நாளில் நடத்தும் வாழ்வுக்கு முற்றிலும் வேறான படியால் பல இடங்களில் விஷயம் விளங்காமலிருக்கும். தவிர, சீடனுக்கு விளக்கிச் சொல்லப்பட்ட விஷயங்களை வெறும் ஞாபகக் குறிப்புகளாகக் கொண்டே அந்நாளில் ரிஷிகள் உபநிஷத்துகளை யாத்தனர். அச்சிட்டு வழங்கித் தனிமையில் படிப்பதற்காக எழுதிய புத்தகங்களல்ல அவை. இக்காரணத்தினாலும் சில இடங்களில் பொருள் விளங்குவது கடினமாகிறது. ஆயினும் வாழ்வை நல்வழியில் நடத்தி, மனதைச் சுத்தமாக வைத்துக்கொண்டு, மெய்ப் பொருளில் உண்மைப் பற்றுடன் படிப்பவர்களுக்கு, இந்த உபநிஷத்துகளைப்போல் உதவக்கூடிய நூல்கள் உலகத்தில் வேறில்லை.