book

விண் இயற்பியலின் சில அம்சங்கள்

Vin Iyarbiyalin Sila Amsangal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மெ. மெய்யப்பன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2008
ISBN :9789380892191
Add to Cart

விண் இயற்பியலின் சில அரசங்கள் என்னும் இந்நூலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மெ. மெய்யப்பன் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். ஏற்கெனவே முனைவர் மெய்யப்பன் அவர்கள் பல அறிவியல் நூல்கள் எழுதிப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார். இந்நூல் சூரியன் மற்றும் விண்மீன்களின் இயற்பியல் பண்புகளை அறியும் வழிமுறைகளைக் கூறுகின்றது. தமிழில் எழுதப்பட்ட இந்நூலை மாணவர்கள் மட்டுமல்ல வானமண்டலத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வலர்களும் எளிதாகப் படித்தறிந்து இயற்கையின் இயக்கங்கள் பற்றி அறிந்துகொள்ளலாம்.

அக்கம் பக்கத்தையே அறிய விரும்பாமல் சம்பாதிப்பதும், சாப்பிடுவதும், உறங்குவதும்தான் வாழ்க்கை என்று நினைக்காமல் இயற்கையின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் உற்றுணர்ந்து பார்த்தால் மனித செயல்பாடுகள் மேன்மையானதாகவே அமையும். எண்ணெய் ஊற்றாத சூரிய விளக்கு பலகோடி ஆண்டுகளாக எரிந்துகொண்டிருக்கிறது. அது எண்ணெய் ஊற்றினால்தான் எரிவேன். சக்தி தருவேன். வெளிச்சம் தருவேன் என்று சொல்லாமல் வெளிச்சம் தந்துகொண்டேயிருக்கிறது. ஏழத்தாழ 15 கோடி கிலோமீட்டர் தூரத்திலிருந்து இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கிறது. பயன் தந்துகொண்டிருக்கிறது. இன்னும் 500 கோடி கிலோமீட்டர் தூரத்திலிருந்து இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கிறது. பயன் தந்துகொண்டிருக்கிறது. இன்னும் 500 கோடி ஆண்டுகள் சூரிய சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். வெறும் நூறு ஆண்டுகளுக்குள் வாழும் மனித வாழ்க்கையில் ஒருவர் வாழ்வுக்காவது வெளிச்சம் கொடுக்க மனிதன் எண்ணவேண்டும். விஞ்ஞானத்தில் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்து உலகத்திற்குப் பயனுள்ள பணியாற்ற முன்வரவேண்டும்.