-
ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் ஆன்மிகத் தலங்கள்தான், உயிர்களை ஆண்டவனோடு ஐக்கியப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆன்மாவை சகலவிதமான தீமைகளிலிருந்தும் மீட்டெடுக்கும் இந்த ஆலயங்களே ஆத்ம சுத்திகரிப்பு நிலையங்கள். அவை ஆன்மிக சிந்தனைகளை வளர்க்கும் அற்புத ஆலயங்கள். ஆதலால்தான், இறைவன் அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து அருள்மழை பொழிகிறான். இறைவன் எல்லோருக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவன். ஆதலால், அறிவார்ந்த முனிவர்கள் முதல் ஓரறிவு சிற்றுயிர்கள் வரை எல்லோரும் வணங்கி வழிபட்டு உய்வுபெற்ற செய்திகளைத்தான் தலபுராணங்கள் உரைத்தன. இந்த ஆலயங்களுக்கு எல்லாம் புண்ணிய யாத்திரையாகச் சென்று, தாம் பெற்ற இறை அனுபவத்தை சக்தி விகடன் இதழில் பகிர்ந்துகொண்டார் காஷ்யபன். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் அருள் மழை பொழியும் அற்புத ஆலயங்கள். இந்த நூலில் பெருமாள் குடிகொண்டிருக்கும் பதினான்கு திருத்தலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடியவருக்கும் இடமளித்த வரலாறுகள், பரம்பொருளை மனதாரப் பற்றிக் கொண்டவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்கள்... என ஆன்மிகம் தோய்ந்த அனுபவ எழுத்துக்களால் நூலாசிரியர் காட்சிப்படுத்தியுள்ளார். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆலயங்களை தன் தூரிகை மூலம் தரிசிக்க வைக்கிறார் ஓவியர் ஜெ.பிரபாகர்.
-
This book Arulmalai pozhiyum arputha aalayangal is written by kashyapan and published by Vikatan Prasuram.
இந்த நூல் அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள், காஷ்யபன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arulmalai pozhiyum arputha aalayangal, அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள், காஷ்யபன், kashyapan, Aanmeegam, ஆன்மீகம் , kashyapan Aanmeegam,காஷ்யபன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy kashyapan books, buy Vikatan Prasuram books online, buy Arulmalai pozhiyum arputha aalayangal tamil book.
|