book

வான சாஸ்திரம்

Vaana Sashthiram

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788189936228
குறிச்சொற்கள் :விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
Out of Stock
Add to Alert List

குழந்தைக்குச் சோறூட்ட வானத்தைக் காட்டி, நிலாவைக் காட்டி, அதன் அழகை ரசிக்கச் செய்து, விண்ணின் விசித்திரத்தை முதன்முதலாக அன்னை அறிமுகப்படுத்துகிறாள். அதுமுதல், பரந்து விரிந்த விண்ணைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் நமக்குள் அதன் பிரமாண்டம், மெய்சிலிர்க்கும் எண்ண அலைகளை ஏற்படுத்துகிறதே. மனத்தை ஈர்க்கும் வானின் நீல நிறம், பளிச் பளிச்சென மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தேய்வதும் வளர்வதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் வெண்ணிலா, அவ்வப்போது பூமியில் எங்கேனும் விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் விண்கற்கள், இதோ இன்றைக்கு நான் பூமியை நெருங்கியிருக்கிறேன்; இந்த சந்தர்ப்பத்திலேயே என்னைப் பார்த்துவிடுங்கள், இனி என்னைப் பார்க்க வேண்டுமானால் நூறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல்லி ஆசையைத் தூண்டிவிடும் கிரகங்கள்... இப்படியாக விண்ணைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் நமக்குள் ஆச்சர்யங்கள் அலைமோதும்.

உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் உடையவர்களான நம் நாட்டிலும் வான சாஸ்திரம் உச்சத்தில் இருந்துள்ளது. கோள்களையும் விண்வெளியையும் பற்றிய பரந்த அறிவை நம் முன்னோர் ஏற்படுத்திச் சென்றுள்ளனர். ஆயினும் கணக்கீடுகள் சார்ந்த அறிவுபூர்வமான அஸ்ட்ரானமி எனப்படும் வானியலைக் காட்டிலும், சுவாரஸ்யங்கள் மிகுந்த அஸ்ட்ராலஜி எனப்படும் ஜோதிடத்தை அதிகமாகக் கையாளத் தொடங்கியதால், முன்னோரின் வானியல் நுட்பம் பிற்காலங்களில் அதிக வளர்ச்சியுறாமல் போய்விட்டது என்பர் அறிஞர் பெருமக்கள்.

இன்றைய அறிவியல் யுகத்தில் வானியல் வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாத்தியமாகியிருக்கிறது. இதற்கு மூலகாரணமாக இருப்பவை, விண்வெளி ஆராய்ச்சியும் வானியலில் பரந்துபட்ட அறிவும்தான்! வளரும் தலைமுறை நாளைய உலகை வழிநடத்திச் செல்ல விண்வெளி சார்ந்த நுட்பங்களை நன்கு அறிந்து தங்களுக்குள் தர்க்கிக்க வேண்டும். காரணம், அடிப்படையை அறிந்து கொண்டு, தங்களுக்குள் ஏன்? எதற்கு? எப்படி? என்கின்ற கேள்விகளைக் கேட்கும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்வதற்கான சாத்தியம் ஏற்படுகிறது. இந்த நூல், அதற்கான யுக்தியை காட்டுகிறது.