book

இதழியல்

Ithaliyal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கி. இராசா
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788188049400
Add to Cart

இதழியல்துறை சார்ந்த நூல்கள் மிகக்  குறைவாகவே வெளிவந்துள்ளன. இதழியல்துறை நுணுக்கங்களை நன்கு அணுகி, ஆய்ந்து, தெளிந்து எழுத்தாளர் கி.ராசா அவர்கள் இந்நூலை உருவாக்கியுள்ளார். செய்தி சேகரிக்கும் முறைகள், செம்மையாக்கம் செய்தல், தலைப்பிடுதல், தலையங்கம் எழுதுதல், படங்கள் அமைத்தல், பக்கப் புனைவு செய்தல், விளம்பரங்கள் இடம்பெச் செய்தல் போன்ற பல்வேறு கோணங்களில் கவனம் செலுத்தி தரமான ஒரு நாளிதழை உருவாக்குவது எப்படி, ஒரு நாளிதழ் நிறுவனத்தை நல்ல முறையில் நடத்துவது எப்படி என்பன போன்ற தகவல்களை இந்நூலில் இடம்பெறச் செய்து பயன்பெறச் செய்கிறார். எச்சரிக்கையாக உருவாக்கப்பட வேண்டியது பத்திரிகை என்பதை ' இதழியல்' என்னும் இந்நூல் சித்திரித்துக் காட்டுகிறது.

 முகலாயர் காலத்தில் நிருபம் என்ற செய்திக் கடிதங்களை எழுதுகின்றவர்கள் நிருபர்கள் என்று அழைக்கப்பட்டனர். வடக்கு( North), கிழக்கு (East), மேற்கு (West), தெற்கு(South) நான்கு திசைகளிலும் நடப்பனவற்றை மக்களுக்கு அறிவிப்பது செய்தி (News) ஆகிறது. இதழியல் குறித்த நூலாசிரியர் கூறும் கருத்துகளை அறிவோம்.