book

தகவல் பெறும் உரிமை

Thagaval Perum Urimai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :94
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788188049615
Add to Cart

மக்கள் பலருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய பல தகவல்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

ஒருவரது நிலம் ஒருவருக்குச் சொந்தமாக இருந்துவரும் நிலையில் அவருக்குத் தெரியாமலேயே அந்த நில்த்திற்குரிய பட்டா வேறு நபர் பெயருக்கு மாற்றி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக வட்டாட்சியரை அணுகினால் அவர் எந்தவித பதிலும் அளிப்பதில்லை. பரிகாரம் கேட்டு நீதிமன்றத்தை அணிகினால் நீதிமன்றமும் நல்ல தீர்ப்பை வழங்குவதில்லை.

பட்டா உரிமை மூலம் அல்ல (Patta is not title) என்று இந்திய உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் பல தீர்ப்புகள் வழங்கியிருந்தபோதிலும் அவைகளையெல்லாம் கீழமை நீதிமன்றங்களில் சில தமது கவனத்தில் கொள்வதில்லை.

இதேபோன்று எத்தனையோ தகவல்கள் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படாமல் போனதால் பொதுமக்களில் பலர் தமது உடைமைகளையும் உரிமைகளையும் இழக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளது.