book

கல்கி வளர்த்த தமிழ்

Kalki Valartha tamil

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :592
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936167
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

தமிழக வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டவர்கள் எவரும் மறக்காத பெயர் கல்கி. வரலாற்று நவீனங்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், தியாக பூமி போன்றவற்றின் மூலம் ஏராளமான வாசகர்களின் மனதை இன்றளவும் மயக்கி வைத்திருக்கும் எழுத்துக்காரர் கல்கி. தான் கண்டு, கேட்டு, உணர்ந்து, உய்த்த அனைத்து நிகழ்வுகளையும் தன் எழுத்தின் மூலம் ஜனரஞ்சகமாகக் கொடுத்தவர் இவர்.
தமிழிசையை வளர்த்தெடுத்தவர்களில் முன்னோடியான கல்கி, தமிழிசை குறித்து எழுதிய கட்டுரைகளும் பிரசித்தி பெற்றவை. அதில் நயமான வரிகளின் மூலம், ஹாஸ்யத் தெறிப்போடு தமிழை லாகவமாகக் கையாண்டிருப்பார். தேசிய இயக்கத்துக்கும், நவீன நாகரிகத்துக்கும் இடையே இருதலைக் கொள்ளி எறும்பாகச் சிக்குண்ட தமிழரின் வாழ்வை, கருப்பொருளாகக் கொண்டு ஆரோக்கியமான நகைச்சுவையும், இலக்கிய நயமும் கோலோச்சும் கல்கியின் எழுத்துவீச்சுதான் கல்கி வளர்த்த தமிழ்.

இதில், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை பரிமாறப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் பேரியக்கத்தால் எழுச்சிப் பெற்ற தேசிய தாகமும், நவீன நாகரிகத்தில் வீழ்ந்த நம் முன்னோர்களின் அடிமை மோகமும் சரிவிகிதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தன்னுடைய இலங்கைப் பயணம் பற்றி கல்கி எழுதியிருக்கும் கட்டுரைகளைப் படிக்கும்போது, நம் இதயங்களை இலங்கையை நோக்கிப் பெயர்த்துக்கொண்டு போகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான ஆதித் தொடர்புகள், பாரம்பரிய நெருக்கங்கள், வரலாற்றுவழி ஆதாரங்கள், கல்வி மற்றும் வாழ்க்கை முறைகள், இலங்கையின் வனப்புகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்கள், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவுச் சிக்கல்கள்... போன்றவற்றை நேர்மையோடு ஆவணப்படுத்தி இருக்கிறார்.

மேலும், மாமல்லபுரம் குறித்த மாறுபட்ட சுவையானத் தகவல்கள், தாய்மொழிவழிக் கல்வியின் அவசியம், தமிழ் இலக்கியத்தின் போக்கு, ஒரு தனிமனித திருமணம் சமூக வாழ்வில் நிகழ்த்தும் ஏற்ற&இறக்கங்கள்... என சகல திசைகளிலும் தன் சிந்தனையை விரித்திருக்கிறார்.

1928ல் தொடங்கி 1938 வரை ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கல்கியின் கட்டுரைகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் கருதி, மீண்டும் அன்றைய ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் கல்கி வளர்த்த தமிழ் என்ற பெயரில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. அவற்றை விகடன் பிரசுரம் இந்த நூலாகக் கொண்டுவந்திருக்கிறது.