book

சொன்னால் முடியும்

Sonnaal Mudiyum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரவிக்குமார்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936136
குறிச்சொற்கள் :நிஜம், ஈழம், தீண்டாமை, சரித்திரம், தகவல்கள், பிரச்சினை, வழக்கு
Add to Cart

தான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக இருக்கிறது. அதிகாரங்களினால் உருவாக்கப்படும் அவலங்களை காலந்தோறும் அனுபவித்து வருபவர்கள் ஏராளம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட சமூக சிந்தனையாளர்கள் பலர் தங்கள் சொல்லையும் செயலையும் பயனுறு வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அத்தகைய சிந்தனையாளர்களில் ஒருவர்தான் ரவிக்குமார். தன்முனைப்புடன் சமூகச் செயல்களைப் புரியும் ரவிக்குமார், தமிழ் நவீன இலக்கிய உலகில் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட மனிதர்களின் வாழ்வை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு எழுதிவருகின்றார். அரசு நிறைவேற்றவேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவற்றுக்கான செயல் திட்டங்களையும் முன்மொழிவதே எழுத்துச் சாதுர்யம்.

அப்படிப்பட்ட இவரது எழுத்து ஜூனியர் விகடன் இதழில் சிந்தனை பகுதியில் வெளிப்பட்டது. அதன் முதல் தொகுப்புதான் இந்நூல்.

இலங்கைத் தமிழர்களை பாதிப்பிலிருந்து எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்புக்கூறுகள் திட்டத்தை அரசு செயல்படுத்தாதது ஏன்? கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏன்? நாட்டில் ஊழலை ஒழிக்க என்ன செய்யலாம்? தீவிரவாதிகளின் கோரிக்கைகள் நியாயமானதா..? அவற்றை நிறைவேற்றலாமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை விவாதித்து அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்.

தமிழக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தாலும், அரசியல்வாதியாகச் சிந்திக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவே ஒலிக்கிறது ரவிக்குமாரின் குரல்.