book

பட்டினப்பாலை

Patinapaalai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :138
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798188048914
குறிச்சொற்கள் :படைப்புக்கலை, சரித்திரம், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையைப் பற்றிய பாடல் என்னும் பொருளில் பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது. பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கிறது.

தன் மனைவியை விட்டுப் பிரிந்து பொருள் தேடுவதற்காக வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதும் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாகச் செலவழுங்குதல் துறையில் இப்பாடல் அமைந்துள்ளது.

''பல வளங்களும் சிற்ப்புகளும் பெற்ற புகழ்மிக்க காவிரிப்பூம்பட்டினத்தைப் பரிசிலாகப் பெறுவேனாயினும் என் மனைவியைப் பிரித்து வாரேன். யான் கடந்து செல்லும் கானம் திருமாவளவன் பகைவர் மீது எறிந்த வேலைக்காட்டிலும் மிக்க வெம்மையுடையது. அவன் செங்கோலை விட நனி குளிர்ச்சியுடையது என் தலைவியின் தோள். ஆதலால், நேஞ்சே அவளைப் பிரிந்து வாரேன்'' என்று கூறும் முறையில் இப்பாடலைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார்.