book

காலத்தை வென்ற பெண்கள்

Kaalathai Vendra Pengal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். மனோன்மணி சண்முகதாஸ்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :190
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788188048625
குறிச்சொற்கள் :பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்
Add to Cart

முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஸ்ரீலங்கா முன்னனி எழுத்தாளர்களில், சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். '' காலத்தை வென்ற பெண்கள்'' என்ற தலைப்பில் எழு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவற்றுள் இரண்டு முதல் ஐந்து வரை நான்கு கட்டுரைகள் சிலப்பதிகாரம், பெரியபுராணம், சீறாப்புராணம், பாஞ்சாலி சபதம் என்னும் இலக்கியங்களில் வரும் பெண் தலைமைப் பாத்திரங்களில் அக்காலப் பெண்டிர் எழுச்சியைப் பிரதிபலிக்கக் காண்கிறார்.

'' கருங்கண்ணும் செங்கண்ணும்'' என்னும் கட்டுரையில் கண்ணகியையும் மாதவியையும் மதிப்பீடு செய்து, ஆடவர் பெண்டிரின் கண்களை நன்கு கண்டறிந்உ செயல்பட வேண்டும் என்பதனைச் சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டுகிறது என்பார். பெரியபுராணத்தில் ஆன்மிகத்தின் சிறப்பினைக் காரைக்கால் அம்மையார் வரலாற்றின் மூலமாக அறிவிக்கிறார். கணவன் பரமதத்தன் அஞ்சி நடுங்கி மனைவியான புனிதவிதியாரை விட்டு விலகியப்பின் புனிதவதிக்குத் துறவு மேற்கொள்வது தவிர வேறு வழியில்லை எனக் காண்கிறார் சேக்கிழார். அதுவே காலத்தின் தேவை என்று சுட்டிக்காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். மனிதன் வாழ்வியலை இயற்கையோடு இயைபுபடுத்தும்போது உலகம் அமைதி காணும் எனக் கட்டுரையை முடிக்கிறார்.