
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.72

Opening the world of stories

Easya pesalam English
Free shipping over ₹500
மொழி என்கிற தொடர்பு சாதனம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இங்கு நடந்துகொண்டிருக்கின்ற அறிவியல் புரட்சி எதையுமே நாம் பார்க்க முடியாமல் போயிருக்கும். அறிவியலின் வளர்ச்சிக்கு மொழி எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல ஒரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் அவன் பயன்பாட்டிற்கும் மொழி அவசியம்.
தாய் மொழியைத் தவிர பிற மொழிகளும் தெரிந்திருத்தல் சாலச்சிறப்பு. பிற மொழிகளைக் கற்கவேண்டிய, பேசவேண்டிய அவசியத்தை இன்றைக்கு அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.
அதன் அடிப்படையிலேயே உலகப் பொதுமொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உலகெங்கிலும் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலை தமிழகத்திலேயே எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இதுவொரு ஆரோக்கியமான வளர்ச்சியாகவே கருதலாம்.
ஆங்கிலம் ஒரே மொழியாக இருந்தாலும், அது அமெரிக்கன் இங்கிலீஷ், பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று இரண்டு நாடுகளை மையப்படுத்தி உலகமெங்கும் இரண்டு விதமாக பேசப்படுகிறது. இந்த நிலையில் ஆங்கிலம் எழுத, பேச தெரிந்துகொள்வது இன்றியமையாதது என்றாகிவிட்டது.
அதைக் கருத்தில் கொண்டு அவள் விகடன் இதழில் அனந்தசாய் எழுதிய ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் என்ற தொடர் வெளிவந்தது. அடிப்படை ஆங்கிலம் தெரிந்தவர்கள், யாரிடமும் எளிதாக தயக்கமின்றிப் பேசவேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்தத் தொடர் வெளியிடப்பட்டது. அந்தத் தொடர்கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் தனது நீண்ட அனுபவத்தோடு கதைப்போக்கில் இந்தக் கட்டுரைகளைக் கொண்டு செல்கிறார். இரண்டு மாணவிகளுக்கு ஆசிரியை வகுப்பு எடுப்பதைப் போல எழுதியிருக்கிறார்.
ஆங்கிலம் கற்கவேண்டும், பேசவேண்டும் என்று ஆர்வமும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களுக்கு இந்த நூல் ஒரு டானிக்.