book

தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்

Thamizh Ilakkiyaththil Siddha Maruththuvam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாநிதி இ. பாலசுந்தரம்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2006
Add to Cart

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இன்பமும் துன்பமும் இயல்பானவை. இன்பம், மகிழச் செய்வது; துன்பம், வருத்தத்தினைத் தருவது. உயிரினங்களை வருத்துகின்ற துன்பம் நோய் எனப்படுகிறது.

“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்''

என்று வள்ளுவர் துன்பத்தினை நோயாக உரைக்கக் காணலாம்.

துன்பத்தினைத் தருவிக்கின்ற நோயை நீக்குவது மருந்து என்பதை,

“இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்க
நோய்நோக்கு ஒன்றன்நோய் மருந்தர்''

என்று திருக்குறள் விளக்குகிறது.

நோயைத் தீர்ப்பது மருந்து. அச்செயலைக் குறிப்பது மருத்துவம்; அச்செயலைச் செய்பவன் மருத்துவன் என்று தமிழ் அகரமுதலி விளக்குகிறது.

மருத்துவம்

மருத்துவம், ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றாகவும், அறக்கொடைகள் முப்பத்து இரண்டனுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

தமிழில் மருத்துவ இலக்கியங்கள்

‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்’ என்னும் இந்த ஆய்வில் மருத்துவம் சார்ந்த செய்யுள் நடையில் அமைந்த நூல்கள், சுவடிகள் ஆகியன ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

தமிழில் வழங்கும் மருத்துவ நூல்கள் அனைத்தும் ‘பதினெண் சித்தர்கள்’ என வழங்கப்பெறும் சித்தர்கள் பெயராலேயே வழங்கப் படுகின்றன. இவை, சித்தர் இலக்கியம் எனவும், இவை கூறும் மருத்துவம் சித்த மருத்துவம் எனவும் கருதப்படுகின்றன. இதனுள், மருத்துவம், வாதம், யோகம், ஞானம் ஆகியன பற்றியும் மருத்துவனின் கடமை, நோயாளி கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், சமுதாயத்திலுள்ள பழக்க வழக்கங்கள், பொது ஒழுக்கங்கள் போன்ற செய்திகளும், தனியே மருத்துவத்தை, வாதத்தை, கற்பத்தை, ஞானத்தைக் கூறும் நூல்களாகவும் அமைந்திருக்கின்றன. இவ்வாறான மருத்துவ நூல்கள் ‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்’ என்னும் தலைப்பில் ஆராயப்படுகின்றன.

மருத்துவ ஆய்வு பற்றிய நூல்கள்

தமிழ் மருத்துவம் சார்ந்த ஆய்வு நூல்கள் ஆய்வுக் கட்டுரைகள் பல. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அவற்றுள் சிறப்பான சிலவற்றைக் குறிப்பிடலாம்.

ஆர். எஸ். அகர்வால் என்பவரின் Secrets of Indian Medicine (இந்திய மருத்துவத்தின் இரகசியங்கள்) என்னும் நூல் இந்திய மருத்துவத்தின் வரலாற்றினை ஆராய்ச்சி நோக்கில் எடுத்துரைக்கிறது. மருத்துவத்தினால் உண்டாகும் குணநலன்கள், உடலியலைப்பற்றி இந்திய மருத்துவம் கூறும் முறைகள், முக்குற்றங்கள், மருத்துவத்துக்கு ஏற்ற முறை, ஏலா முறை, நோய், நோய்க்கான மருந்து, நோய் தடுக்கும் மருந்து, உடலைக் காக்கும் உயிரணுக்கள் நுண்சத்துகள் (vitamins) போன்ற மருத்துவச் செய்திகளை உள்ளடக்கியதாக உள்ளது. இந்நூல் முழுவதும் கண், கண்ணோய், கண் மருத்துவம், கண் மருத்துவன் ஆகியன பற்றியே அதிகம் குறிப்பிடுவதால் இந்நூல் கண் மருத்துவ நூல் எனல் பொருந்தும்.