book

நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு

Namakkal Kavignarin Valkai varalaru

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :95
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788188048373
குறிச்சொற்கள் : தலைவர்கள், சரித்திரம், கவிஞர்
Out of Stock
Add to Alert List

காந்தியடிகள் தொடங்கிய விடுதலைப்போராட்டத்திற்குக் ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'' என்று உயிட்டும் வரிகளைத் தீட்டிக்காட்டி வீர்ர்களை எழுப்பிவிட்டவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை. எழு பெண்களைப் பெற்று ஆண்குழந்தைக்காகத் தவமிருந்த பெற்றோருக்கு எட்டாவதாகப் பிறந்து வறுமையிலும் புலமைபெற்றுப் புகழ்பெற்ற கவிஞர். தாயிமிருந்து ஈரமான சிந்தனைகளைப் பெற்றவர். சிறந்த இசைக் கலைஞர். நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் படங்களை வரைவதில் வல்லவர். விளையாட்டுத்தனம் மிக்கவர்.

 கிட்டப்பா, அவ்வை சண்முகம் ஆகியோரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். '' நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும், நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்'' என்று பாரதியால் பாராட்டப்பெற்ற ஓவியக் கலைஞர்.

 அரசவைக் கவிஞராயிருந்து ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை பெற்று வந்த அவர்,  பரிசுத்தொகை நிறுத்தப்பட்டுப் பின்தங்கிப் பொருளாதாரச் சூழலில் உழன்றபோதும்  மன உறுதி குன்றாமல் உழைத்தவர். சட்ட மேலவை உறுப்பினராக இருந்தபோது நேரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோருடன் உரையாடிச் சிந்தனை உரம் பெற்றவர். மத்திய அரசின் பத்ம்பூஷன் பட்டம் பெற்றுப் புகழ்நிலையில் உயர்ந்தவர்.