book

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)

Gangai Konda Cholan(part 3)

₹530
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :520
பதிப்பு :3
Published on :2014
Add to Cart

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான்.

கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது .

ஸ்ரீ விஜயத்தை கைபற்ற தான் முதலில் வலுவான கடற் படையை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்து, மீகாமன் மற்றும் மாலுமிகளை தேர்தேடுக்கிறார். ஒரு கொள்ளைக்கார கப்பலை கைப்பற்ற முயலும்போது, மாணிக்கவாசகன் என்ற பண்டியனாட்டனை சந்திக்கிறார். அவன் கடல் மற்றும் அதன் போக்கினை எடுத்து உரைக்கிறான்.