book

அஞ்சாத சிங்கம் சூர்யா

Anjaatha Singam Surya

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. சிபிச்சக்ரவர்த்தி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :155
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184766042
Add to Cart

திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் என்ற நிலையில் ஏறத்தாழ 18 வருடங்களுக்கு முன்பு கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த அந்த இளைஞன், இன்றைய தினம் தமிழ்த் திரையுலகின் மின்னும் நட்சத்திரம். சூர்யா நடித்தால் சூப்பர் டூப்பர் என்ற நிலையில் வெற்றி நாயகனாக அவர் வலம் வருவதற்கு பின்னால் உள்ள அவரது உழைப்பு எத்தகையது? திரையுலகில் அவர் அடைந்த அனுபவம் என்ன? ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வழக்காறு. சூர்யா வாழ்வில் அது இரண்டு மடங்கு நிஜம். லட்சுமி சிவகுமார் என்ற அற்புதத் தாயும், ஆரோக்கியமான ஆலோசனைகள் சொல்லும் காதல் மனைவி ஜோதிகாவும் சூர்யாவின் ஆற்றலைப் பெருக்கியது எப்படி? ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற பழமொழியை பொன்மொழி எனப் போற்றும் சூர்யா கோடம்பாக்கத்தின் செல்லப் பிள்ளை ஆனது எப்படி? சக்ஸஸ் நாயகன் சூர்யாவின் வெற்றி ரகசியங்களைச் சொல்கிறது இந்த நூல். சூர்யாவின் இளமை தொடங்கி, கல்லூரி கலாட்டா, சினிமா அனுபவங்கள், ஜோதிகாவுடன் காதல் அனுபவம், கவர்ந்த பெண்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களைப் பற்றி அவரே அளித்த தகவல் திரட்டு இது. 1997&ல் ‘நேருக்கு நேராக’ நடந்து, 2013&ல் ‘சிங்கமாக’ கர்ஜித்து 25 மெகா ஹிட் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்கு அளித்து மாஸ் ஹீரோவாக வலம்வரும் சூர்யாவின் திரைப்பட டைரியாக இந்த நூல் மலர்ந்துள்ளது. ஆம்! ஆனந்த விகடனில் பல காலகட்டங்களில் சூர்யா அளித்த பேட்டிகள், அவர் நடித்த படங்களின் முன்னோட்டங்கள், சூர்யா நடித்த படங்கள் குறித்த விருப்பு வெறுப்பற்ற விகடன் டீமின் விமர்சனங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல். அதுமட்டுமல்ல... சூர்யாவைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், சூர்யாவின் ஸ்வீட் டிஜிட்டல் படங்கள் என கலர்ஃபுல் பக்கங்கள் இங்கு உங்களுக்காகக் காத்திருக்கின்றன. “ஒவ்வொரு படம் பண்ணும்போதும் பயமா இருக்கு. இனிமேலும், சினிமாவை விளையாட்டா எடுத்துக்க முடியாதபடி, என் மேல எல்லோருக்கும் நம்பிக்கை வந்திருக்கு” என்று மனம் திறக்கும் நடிகர் சூர்யா கடந்துவந்த சினிமாச் சுவடுகளோடு பயணிக்கத் தயாராகுங்கள். பக்கத்தைப் புரட்டுங்கள்... சூர்யக் கிரணம் உங்கள் மீது படரும்!